கிராமமயமாக்கலாமோ?

Villagerization
Villagerization
Published on

சமீப காலமாக இந்திய நகரங்களில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் தலையாயது புவி வெப்பமடைதல் என்பதாகும். இதற்கு முக்கிய காரணம் நகரமயமாக்குதல் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதும் வெப்பநிலை உயர்வதும் இதனால்தான் என்கிறார்கள். உதாரணமாக நகரங்களைப் பொருத்தவரை வருடத்தில் 8 அல்லது 9 மாதங்கள் வெயில் கொளுத்துகிறது. வெப்பம் இரவிலும் அதிகரித்து வருகிறது.

அதற்குக் காரணம் ஏராளமான கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அதிக அளவில் உருவானதே. கட்டிடங்கள் மற்றும் சாலைகளுக்கு பயன்படுத்தும் சிமெண்ட் கான்கிரீட் மற்றும் ஆஸ்பால்ட் ஆகியவை வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இரவில் அவை வெப்பத்தை உமிழ்வதால் தகிப்பு உண்டாகிறது. வெப்பநிலை இப்பொழுது வருடாவருடம் உயர்ந்து கொண்டே போவதே இதற்கு சாட்சி!

வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி மற்றும் சாலைகளில் செல்லும் வாகனங்களில் ஏசி என அவைகளும் தம் பங்குக்கு உள்ளே குளிராக வைத்து வெளியில் வெப்பத்தை உமிழ்கின்றன.

ஆக நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கிற கதைதான். வேறு வழியில்லை. இனியாவது மரங்களை வெட்டாமல் வளர்க்க பாடுபடவேண்டும். பசுமைப் பிரதேசங்களை உருவாக்க வேண்டும்.

இயற்கையை அழிப்பதில் நாம் முன்னணியில் நிற்கிறோம். காடுகள், நதிகள், ஏரிகள், வயல் வெளிகள் என எதையும் நம் மக்கள் விட்டு வைக்கவில்லை. உணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனுக்கு தலையாயவை. ஆனால் உறைவிடத்திற்காக உணவை அதாவது அதைத் தரும் நிலத்தை அழித்துவிட்டோம்.

இதையும் படியுங்கள்:
'ராம்சர் இடங்கள்' என்றால் என்ன? தமிழ்நாட்டில் உள்ள 18 ராம்சர் இடங்கள் எவை?
Villagerization

எங்கும் ஏசி எதிலும் ஏசி என வாழ வேண்டி இருப்பதால் நாமே வெப்பத்தை அதிகமாக்கி வாழ்கிறோம். அதனால் வெப்பம் அதிகமாகி பலவிதமான நோய்கள் உருவாகின்றன. இனி நகரமயமாக்குதல் குறையாது எனில் ஓட்டு வீடுகளும், வயல் வெளிகளும் மரங்களும் கொண்ட குளிர்ச்சியான கிராமங்களை நோக்கி மீண்டும் படையெடுக்க வேண்டும் போலிருக்கிறது. இவ்வளவு ஏன் மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் இவைகளிலும் முன்பை விட வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது. பகலெல்லாம் சூரியன் தகிக்க இரவில் அனல் தகிக்கும் கட்டிடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மரங்களடர்ந்த தோப்புகளும், பசுமையான புல்வெளிகளும், வயல் வெளிகளும், ஏரிகளும் பழமை மாறாமல் குளிர் காற்றுடன் நகரத்திற்குள் திரும்பிட வேண்டுமென ஆவல் மேலிடுகிறது. கிராமமயமாக்கலாமோ எனத் தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com