பிளாஸ்டிக்கை ஓரளவு குறைத்துள்ளோம்… ஆனால் மைக்ரோ பிளாஸ்டிக்?

Plastic Waste
Plastic Waste
Published on

பிளாஸ்டிக்கை சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு எப்படி மாற்றி அமைத்து பயன்படுத்தினாலும்; அது வேறொரு பரிமாணத்தில் இன்னும் நமக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

மைக்ரோபிளாஸ்டிக் (Micro plastics) என்பது 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவிலான சிறிய பிளாஸ்டிக் துகள்கள் போன்றது; நம் கண்களுக்கும் எளிதில் தெரியாது. அவை இரண்டு முக்கிய மூலங்களிலிருந்து உருவாகின்றன. முதன்மை மைக்ரோபிளாஸ்டிக் (primary microplastics) இவை ஆரம்பத்திலே சிறியதாக தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அழகுசாதனப் பொருட்களில் உள்ள மைக்ரோ பீட்கள் (microbeads) அல்லது தொழில்துறை துகள்கள் (industrial pellets) போன்றவை.

இரண்டாம் நிலை மைக்ரோபிளாஸ்டிக் (Secondary microplastics) இவை சூரிய ஒளி, உராய்வு (friction) வேதியியல் சிதைவு (chemical degradation) போன்ற சுற்றுச்சூழல் காரணங்களால் நாம் பயன்படுத்தும் பாட்டில்கள், பைகள், செயற்கை ஜவுளிகளில் (synthetic textiles) உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் சிதைவுகளால் உருவாகின்றன.

மனிதர்களை எப்படி பாதிக்கிறது? இந்தத் துகள்கள் நமது சுற்றுச்சூழலில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மூலையிலும் ஊடுருவியுள்ளன. பெருங்கடலில் ஆரம்பித்து, ஆறுகள், மண், நாம் சுவாசிக்கும் காற்று வரை உள்ளது. இதன் ஆபத்து எந்த அளவில் இருக்கிறது என்றால் நுரையீரல், கல்லீரல், நஞ்சுக்கொடி (placenta), மூளை உட்பட மனித திசுக்களிலும் (Tissues) மைக்ரோபிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

மாசுபட்ட உணவு அல்லது நீர் வழியாகவோ, சுவாசிக்கும் காற்றில் பரவும் துகள்களாலும், நம் தோலை (skin) பராமரிப்பதற்காக நாம் உபயோகிக்கும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் அல்லது செயற்கை துணிகள் (synthetic fabrics) மூலம் பாதிப்பைத் தருகின்றன. மைக்ரோபிளாஸ்டிக் உடலுக்குள் நுழைந்தவுடன் சில அலர்ஜிகளை வரவைக்கும், ஹார்மோன் செயல்பாட்டைச் சீர்குலைக்கும். கூடுதலாக இதயப் பிரச்னைகள், இனப்பெருக்கக் கோளாறுகள், புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் பங்களிக்கும்.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைக்கிறீங்களா? இது உங்க உயிருக்கே ஆபத்து!
Plastic Waste

எப்படி குறைக்கலாம்?

மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்ததுபோல் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, செயற்கை ஆடைகளைத் (Synthetic fabrics) தவிர்ப்பது, பிளாஸ்டிக்கைவிட கண்ணாடி அல்லது உலோக கொள்கலன்களை (Containers) உபயோகிப்பது ஆகியவை மைக்ரோ பிளாஸ்டிக் வெளிப்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும். நீர் வடிகட்டிகள் (Water filters) பயன்படுத்துவது, இயற்கையான முறையில் உருவாகும் துணிகளை (natural fiber textiles) உடுத்தலாம், பிளாஸ்டிக்-பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பிளாஸ்டிக் பைகளை எரிப்பதால் உண்டாகும் தீமைகள்!
Plastic Waste

இதோடு நீண்ட நாட்களுக்கு நன்மை அளிக்க பல கொள்கைகளை வகுக்க வேண்டும். நுண்ணுமணிகளை தடை செய்தல் (banning microbeads), பிளாஸ்டிக் சேர்க்கைகளை ஒழுங்குபடுத்துவது (regulating plastic additives), கழிவு மேலாண்மையை மேம்படுத்துதல் (improving waste management) போன்றவை இதில் மிகவும் முக்கியமானவை. மக்கும் பொருட்கள் அல்லது மைக்ரோ பிளாஸ்டிக்கை எடுக்கும் வடிகட்டிகள் (laundry filters) போன்ற வளர்ந்துவரும் கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் இதற்கான நம்பிக்கைக்குரிய தீர்வுகளை வழங்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com