வானத்தையே துருவிக் கொண்டிருந்தால் போதுமா? பூமிப்பந்துக்கு உள்ளேயே ஏராளமான மர்மங்கள் புதைந்திருக்கின்றனவே.

Doggerland.
Doggerland.

'டாக்கர் லாண்ட்' (Doggerland) என்ற வளமான நாகரிகம் மிக்க நிலப்பகுதி 8200 ஆண்டுகளுக்கு முன்னால் இப்போதைய வடகடல் வட்டாரத்தில் இருந்தது என்றும், 'பனி யுகம்' காரணமாக பூமியின் நீர்மட்டம் உயர்ந்து கடலடியில் போய்விட்டது என்றும் கருதுகிறார்கள்.

வடகடல் மற்றும் பால்ட்டிக் கடல் ஆழத்தில் நீருள் புதையுண்டு கிடக்கும் புராதானமான நாகரிகங்களைப்‌ பற்றிய அகழாய்வில் வட ஐரோப்பிய ஆய்வகங்களின் அறிஞர்கள் குழு ஈடுபட்டிருக்கிறது.

இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியின் கடல்மட்டம் இப்போது உள்ளதை விட130 மீட்டர் கீழே இருந்தது என்றும், புவிவெப்பமடைதலின் காரணமாக படிப்படியாகக் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உடலில் Protein அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா? ஜாக்கிரதை மக்களே! 
Doggerland.

அந்த காலத்தில் 77,00,000 சதுர மைல் பரப்புள்ள கூடுதலான நிலம் நீருள் அமிழாமல் இருந்தது என்றும் கருதுகிறார்கள்.

இதில் 12,60,000 சதுர மைல் பரப்பு ஐரோப்பாவின் கடற்கரைப்பகுதியை ஒட்டியே இருந்தது என்கிறார்கள்.

யு.கே. நெதர்லாந்து நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களைக் கொண்ட SUBNORDICA என்கிற அமைப்பு இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com