
கடல் சிங்கங்கள் என்பது Otariidae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை கடல் பாலூட்டிகள். இவற்றிற்கு காதுகள் வெளியில் தெரியும். அதனால் ‘earred seals’ என்றும் இவை அழைக்கப்படுகின்றன. நீந்தும் திறன் மிக்க விலங்கு. தரையில் நன்றாக நடக்கவும், சில சமயங்களில் ஓடவும் கூட இவற்றால் இயலும். கடல் சிங்கத்தின் (Sea Lion) முக்கியமான ஏழு வகைகள் மற்றும் அவை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. California Sea Lion (Zalophus californianus): இது பொதுவாக சுற்றுலா பகுதிகளில் காணப்படும் மற்றும் சர்க்கஸ் / பேஸின் நிகழ்ச்சிகளில் பயிற்சி செய்யப்படும் வகை. இதன் வாழிடம் கலிஃபோர்னியா, மெக்சிகோ, அலாஸ்கா. இதன் உணவு மீன்கள், squid, octopus ஆகும். இவற்றின் நீளம் / எடை ஆண் 2.4 மீட்டர் / 350 கிலோ, பெண் 2 மீட்டர் / 100 கிலோ.
சிறப்பம்சம்: மிகவும் புத்திசாலி மற்றும் மனிதர்களுடன் பழகக்கூடிய தன்மை.
2. Steller Sea Lion (Eumetopias jubatus): கடல் சிங்க வகைகளில் மிகப்பெரிய உருவம் கொண்டது. இதன் வாழிடம் வடக்கு பசிபிக் கடலில் அலாஸ்கா, ரஷ்யா, ஜப்பான். இதன் உணவு மீன்கள், squid, crab. இவற்றின் நீளம் / எடை ஆண் 3 மீட்டர் / 1,100 கிலோ, பெண் 2.5 மீட்டர் / 350 கிலோ.
சிறப்பம்சம்: ஆண் கடல் சிங்கங்கள் மிகவும் புடைத்த தலையுடன் சிங்கத்தைப் போல் தோற்றம் அளிக்கும்.
3. South American Sea Lion (Otaria flavescens): இது இடுப்புத் தோள் பகுதியில் பெரும் தசைகளுடன் கூடிய வலிமையான உருவம். இதன் வாழிடம் தென் அமெரிக்காவின் அண்டார்டிக் பகுதிகளாகிய அர்ஜென்டினா, சிலி, பெரு. இதன் உணவு மீன்கள், squid, சிலவிதமான பறவைகள். இதன் நீளம் / எடை ஆண் 2.7 மீட்டர் / 300 முதல் 350 கிலோ, பெண் 2 மீட்டர் / 150 கிலோ.
சிறப்பம்சம்: ஆண் கடல் சிங்கங்கள் ஒரு பெரிய ‘கொம்பு’ போன்ற கழுத்து பகுதியுடன் காணப்படும்.
4. Australian Sea Lion (Neophoca cinerea): இந்த கடல் சிங்கங்கள் மிகவும் அபூர்வமான வகை. தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இதன் வாழிடம் தென் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரை. இவற்றின் உணவு மீன்கள், squid, lobster இதன் நீளம் / எடை ஆண் 2.5 மீட்டர் / 300 கிலோ, பெண் 2 மீட்டடர் / 100 கிலோ.
சிறப்பம்சம்: இனப்பெருக்கம் வருடா வருடமல்ல. ஒவ்வொரு 17 மாதங்களுக்கும் ஒரு முறை.
5. New Zealand Sea Lion (Phocarctos hookeri): உலகின் மிக ஆபத்தான கடல் சிங்க வகைகளில் இது 0ஒன்று. இதன் வாழிடம் நியூசிலாந்து சதர்லாந்த் தீவுகள், ஆக்லண்ட் தீவுகள். இவற்றின் உணவு மீன்கள், squid, penguin, seal pups. இவற்றின் நீளம் / எடை ஆண் கடல் சிங்கங்கள் 3 மீட்டர் / 450 கிலோ, பெண் 2 மீட்டர் / 160 கிலோ.
சிறப்பம்சம்: பசுமையான நிறம் கொண்ட உடல் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது.
6. Galápagos Sea Lion (Zalophus wollebaeki): ஜலகடல் தீவுகளில் மட்டுமே காணப்படும் தனிப்பட்ட வகை கடல் சிங்கங்கள் இவை. இவற்றின் வாழிடம் Galápagos Islands (எக்வடார் அருகில்). இதன் உணவு மீன்கள், squid. இவற்றின் நீளம் / எடை ஆண் கடல் சிங்கங்கள் 2.5 மீட்டர் / 250 கிலோ, பெண் 2 மீட்டர் / 100 கிலோ.
சிறப்பம்சம்: சூடான காலநிலையில் வாழும் ஒரே கடல் சிங்க வகை இது.
7. Japanese Sea Lion (Zalophus japonicus): எண்ணெய், தோல், தந்தம் பெறுவதற்காகவே மக்கள் அதிகமாகவே இந்த வகை கடல் சிங்கங்களை வேட்டையாடி அழிந்து விட்டனர்.
பொதுவாக, கடல் சிங்கங்கள் கடலியல் சூழலுக்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன.