பூச்சியினமா ஈசல்? உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் அற்புத பூச்சி!

winged termite uses
winged termite life cycle
Updated on

சல் (winged termite) என்பது சிறகு முளைத்த அதாவது இறக்கைகள் கொண்ட கரையான்கள்தான். இது ஒரு குறிப்பிட்ட பூச்சியினம் அல்ல, மாறாக கரையான்களின் இனப்பெருக்க காலத்தில் வெளிவரும் இறகுகள் கொண்ட கரையான்களாகும்.

ஆப்பிரிக்கா போன்ற சில இடங்களில் முதல் மழை பெய்யும் பொழுது விளக்குகளை ஒளிரவிட்டு ஈசல்களை கவர்ந்து பிடித்து, அவற்றின் இறக்கைகளை நீக்கி வறுத்து பொடியாக்கி சேமித்து வைப்பார்கள்.

ஈசல்கள் எப்படி உருவாகிறது?

ஈசல்கள் கரையான் புற்றுகளில் உருவாகின்றன. பங்குனி, சித்திரை மாதங்களில் ஈசல் புழுக்கள் முட்டைகளை இடுகின்றன. அவை பொரிந்து ஈசல்களாக வெளி வருகின்றன. பருவ மழை காலங்களில் ஈசல்கள் அதிகம் தென்படும். 'புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டது போல' என்று ஒரு பழமொழி கூட உண்டு. புற்றீசல்போல் ஒரு திடீர் கூட்டம் அல்லது எழுச்சி திடீரென வெளிவருவதை குறிக்கும் வகையில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.

ஈரப்பதம் நிறைந்த மழைக்காலங்களில் இவை புற்றுகளை விட்டு வெளியேறுகின்றன. ஈசல்களுக்கு 4 இறக்கைகள் இருந்தாலும் கூட அவற்றைக் கொண்டு காற்றில் பறக்க முடியாது. எனவே அவை பெரும்பாலும் காற்று இல்லாத காலங்களில் அல்லது விளக்கு வெளிச்சத்தை நோக்கி செல்கின்றன.

புற்றிலிருந்து வெளி வருகிற ஈசல்களில் சுமார் 80 சதவிகிதம் வரை பறவைகள், பல்லி, ஓணான், தவளைகள் போன்றவற்றிற்கு இரையாகி விடுகின்றன. எஞ்சியவை சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும் ஜோடி ஜோடியாக ஈர மண்ணை துளைத்துக்கொண்டு உள்ளே போகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்து அவற்றின் ஆயுட்காலம் ஒருநாள்தான் என்று தவறாக கருதுகிறோம். இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கரையான் காலனியை உருவாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
பல்லுயிர் பெருக்கத்தின் ஆதாரமாக விளங்கும் மலைகளை அதிகம் கொண்ட டாப் 5 நாடுகள்!
winged termite uses

தேனீக்களைப் போலவே கரையான்களிலும் ராணி, ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று நான்கு வகைகள் உள்ளன. ராணி கரையான்கள் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள் வரை இடும் திறன் கொண்டவை. புற்றை பாதுகாக்கும் பணியை சிப்பாய் கரையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற வேலைகளை வேலைக்கார கரையான்களும் செய்கின்றன.

ஈசலின் ஆயுட்காலம் பொதுவாக 12 முதல் 20 ஆண்டுகள் வரை. கரையான்களின் நான்கு வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுட்காலம் உண்டு. இருப்பதிலேயே வேலைக்கார கரையான்கள்தான் குறைந்த ஆயுட்காலம் கொண்டவை. அதாவது 4 முதல் 5 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

ஈசலின் வகைகள்:

ஈசலில் பல வகைகள் உள்ளன. நெல் ஈசல், மாலைக்கண் ஈசல், கொழுந்தீசல், நாய் ஈசல் என உள்ளன. இவற்றில் நாய் ஈசலைத் தவிர மற்ற அனைத்தும் உண்ணத் தகுந்தவை.

ஈசலை சாப்பிடலாமா?

ஈசலை சாக்கு பையில் போட்டு இரண்டு புறமும் பிடித்துக் கொண்டு குலுக்கும்பொழுது ஈசலின் சிறகுகள் உதிர்ந்துவிடும். பின்னர் அவற்றை நன்கு காயவைத்து உண்ணுவதற்கு ஏற்ற பகுதியை (தலை மற்றும் இறகுகளை நீக்கி) அரிசியோடு சேர்த்து வறுத்து சாப்பிடுகிறார்கள். நேரடியாக எண்ணெயில் பொரித்து மசாலா பூரி போன்றும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. கேழ்வரகு, கம்பு, தினை போன்ற சிறுதானிய மாவுடன் இவற்றை சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய 7 ராட்சத எலிகள்: நீங்க கேள்விப்படாத ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
winged termite uses

மருத்துவ குணங்கள்:

சித்த மருத்துவத்தில் 'இந்திர கோபப் பூச்சி' என்று அழைக்கப்படும் இது ஸ்டார்ச் அதிகமாக கிடைக்கும் பகுதிகளில்தான் உயிர் வாழ்கின்றன. இது ஒரு சத்தான மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவாக பார்க்கப்படுகிறது. இதனை வறுத்துப் பொடியாக்கி அல்லது நேரடியாக உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்ணப்படுகின்றன.

இதில் புரதம், செம்பு சத்து அதிகம் உள்ளது என்றும் உணவாக எடுத்துக்கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது. ஈசலை எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில் தடவி தசை பிடிப்புகளை போக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com