சுண்டைக்காயை வெறுப்பவர்களையும் சாப்பிட வைக்கும் 4 அசத்தல் ரெசிபிகள்!

Amazing recipes
Variety sundaikkaai recipes
Published on

பச்சை சுண்டைக்காய் துவையல்

தேவை:

பச்சை சுண்டைக்காய் - அரை கப்

பச்சை மிளகாய் - 4

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

புளி - சிறிதளவு

பெருங்காயம் - 1 சிட்டிகை

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்.

செய்முறை:

சுண்டைக்காய்களை ஆய்ந்து கழுவி இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போடவும். பிறகு அதனை நன்கு கழுவ வேண்டும். அதில் உள்ள விதைகள் வெளிவரும். பிறகு பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்களைக் கழுவிப் பொடியாக நறுக்கவும்.

ஒரு காடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பெருங்காயம், வரமிளகாய் போட்டு பொரிந்ததும் பச்சைமிளகாயைப் போடவும். அரை நிமிடம் வதக்கி சுண்டைக்காயைப் போட்டு வதக்கவும். அது பாதி வதங்கும்போது வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். முக்கால் பதம் வதங்கியதும் உப்பு புளி சேர்த்து தேங்காய்த் துருவல் போடவும். அரைநிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

ஆறியதும் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும், சுவையான, ஆரோக்கியமான சுண்டைக்காய் துவையல் தயார்.

*******

பச்சை சுண்டைக்காய் குழம்பு

தேவை:

பச்சை சுண்டைக்காய், சின்ன வெங்காயம் - தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் - 2, பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - 1, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், குழம்பு பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பூண்டு, வெங்காயம், தேங்காயை பொடியாக நறுக்கவும். சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவி, மத்தால் லேசாக நசுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி, சுண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி , சுண்டைக்காய் வேகும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சுவையான பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி.

********

இதையும் படியுங்கள்:
அப்பளத்தில் இருந்து கொழுக்கட்டை வரை! சமையல் குறிப்புகளின் பெட்டகம் இதோ!
Amazing recipes

பச்சை சுண்டக்காய் பக்கோடா

தேவை:

பச்சை சுண்டைக்காய் - அரை கப்

கடலைமாவு - 1கப்

அரிசிமாவு - 3 ஸ்பூன்

கொத்தமல்லி - 1 கைப்பிடி (நறுக்கியது)

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

சுண்டைக்காயின் காம்புகளைபும், விதைகளையும் நீக்கி விட்டு நீரில் போடவும். 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் சுண்டைக்காய், கடலைமாவு, அரிசிமாவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்தூள், எலுமிச்சைசாறு, சிறிதளவு உப்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

இதை நன்றாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பச்சை சுண்டைக்காய் பக்கோடா தயார். இது உடலுக்கு மிக நல்லது.

*******

பச்சை சுண்டக்காய் ஊறுகாய்

தேவை:

பச்சை சுண்டைக்காய் - ஒரு கப்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய் தூள் - 4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

இதையும் படியுங்கள்:
புதுமையான மோர்க்களி ரெசிபி! வெறும் 15 நிமிடத்தில் தயார், ஈஸியா செய்யலாம்!
Amazing recipes

செய்முறை:

சுண்டைக்காயை சுத்தம் செய்து, ஒரு மண் சட்டியில் போட்டு அதனுடன் உப்பு, எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு நன்கு குலுக்கி விட்டு மூடி வைக்கவும். தினமும் கிளறிவிடவும். 5 நாட்களில் நன்கு தண்ணீர் விட்டு இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, பொரிந்ததும் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து பின் மிளகாய்தூள் சேர்க்கவும். பிறகு ஊற வைத்த சுண்டைக்காயை அதில் கொட்டி கிளறவும். 3 நிமிடம் அடுப்பில் அப்படியே வைத்திருந்து பின் ஆறியதும் ஒரு கண்ணாடி சாடியில் போட்டு வைக்கவும். சுவையான பச்சை சுண்டைக்காய் ஊறுகாய் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com