பத்தே நிமிடத்தில் கமகமக்கும் வாங்கி பாத் மற்றும் வாழைத்தண்டு மோர்க்குழம்பு செய்வது எப்படி?

south-indian-lunch-recipes
south-indian-lunch-recipes
Updated on

பொதுவாக ஒரு சில குழந்தைகளுக்கு இந்த கத்திரிக்காயையும் வாழைத் தண்டையும் கண்டாலே பிடிக்காமல் இருக்கும். வேற லெவலில் டிஃபரன்ட்டாக செய்தால் எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

முதலில் வாங்கி பாத் அதாவது கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வாங்கி பாத் செய்முறை:

நான் மூன்று பேர் சாப்பிடும் அளவிற்கு கூறி இருக்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றவாறு அளவை அதிகரித்தோ அல்லது குறைத்தோ செய்து கொள்ளவும்.

முதலில் 250g கத்தரிக்காயை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு மீடியம் சைஸ் தக்காளி மற்றும் வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் இரண்டு ஸபூன் கடலை பருப்பு, இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி விதை(தனியா), மூன்று காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு கைப்பிடி பச்சை வேர்க்கடலையை போட்டு வறுக்வும். பருப்பு பொன்னிறமாக வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை வாணலியிலிருந்து எடுத்து ஆற வைத்து பிறகு மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.

அடுப்பை மூட்டி வாணலியை வைக்கவும். வாணலி சூடான பிறகு நான்கைந்து ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி காயந்த பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போடவும். சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பிறகு கத்திரிக்காய் தூண்டுகளை போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து வதக்கவும்.

வாணலியை மூடி வைத்து அவ்வப்போது கிளறவும். காய் நன்றாக வெந்த பிறகு கரண்டியால் மசிக்கவும். எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்த பின் அரைத்து வைத்த பவுடர் மற்றும் சாத்தை போட்டு கிளறவும். முதலிலேயே சாதத்தை அதிகமாக போட வேண்டாம். கொஞ்சம் கொஞசமாக போட்டு கலந்த பின் தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு சேர்த்து கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்து விடவும். மேலே சிறிது நெய்யை ஊற்றி கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இதற்கு சாதாரண அரிசியே போதுமானது. பாசுமதி அரிசி தேவையில்லை.

அடுத்தபடியாக இதற்கேற்றவாறு தொட்டு கொள்வதற்கு வாழைத் தண்டு மோர்க் குழம்பு ரெசிபியை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
சப்பாத்தி மாவை நீண்ட நேரம் மிருதுவாகவும், நிறம் மாறாமலும் சேமிப்பது எப்படி?
south-indian-lunch-recipes

வாழைத்தண்டு மோர்க் குழம்பு செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் மூன்று ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு தண்ணீரில் ஊற வைக்கவும்.

அது ஊறுவதற்குள் ஒரு கிண்ணம் அளவிற்கு வாழைத் தண்டை நாரில்லாமல் பொடி பொடியாக நறுக்கி அதை மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் போடவும்.

ஐந்து நிமிடத்திற்கு பிறகு அந்த தண்ணீரிலிருந்து வாழைத் தண்டை எடுத்து ஒரு குக்கரில் போட்டு சிறிது மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும். நானகைந்து விசில் வந்த பிறகு அணைக்கவும்.

இப்போது ஊற வைத்துள்ள கடலை பருப்பு சீரகத்துடன் ஒரு கப் தேங்காய் துறுவல் மற்றும் நான்கு அல்லது ஐந்து பச்சை மிளகாய் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக மைய அரைத்துகொள்ளவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்துள்ள வாழைத்தண்டை தண்ணிரோடு போடவும். அதில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பையும் போட்டு கலக்கவும். இரணடு கப் மோரையும் ஊற்றி கலக்கவும். மோர் திக்காக இருக்க வேண்டும். அடுப்பை மூட்டி இந்த கலவையை வைத்து கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். சிறிது பொங்க ஆரம்பித்ததும் இரண்டு ஸ்பூன் அரிசி மாவை கரைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு இதமான வெள்ளரி விருந்து: 4 வகை ஆரோக்கிய ரெசிபிகள்!
south-indian-lunch-recipes

நன்றாக கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். இலுப்பை கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டு காயந்த மிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கருவேப்பிலையை போட்டு தாளித்து அதை மோர்க் குழம்பில் போடவும். சுவையான மற்றும் ஹெல்தியான வாழைத்தண்டு மோர்க் குழம்பு ரெடி.

இந்த மாதிரி செய்தால் வாழைத் தண்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com