சுவையான, சத்தான 3 பாரம்பரிய காஞ்சிபுரம் உணவு வகைகள்!

traditional Kanchipuram dishes!
Lifestyle soriws
Published on

யிர் கஞ்சி என்பது ஒரு பாரம்பரிய மற்றும் ஆரோக்கியமான உணவாகும்.

பயிர் கஞ்சி

தேவை:

பச்சைப்பயறு, கருப்புஉளுந்து, சிறுபயறு – 1 கப்

பச்சரிசி – ½ கப்

வெல்லம் – 1 கப்

தேங்காய்ப்பால் – 1 கப்

உப்பு – ஒரு சிட்டிகை

இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

நெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:

பயிறு வகைகளையும் அரிசியையும் தனித்தனியாக சுத்தமாக கழுவி 2–3 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீருடன் வேகவைக்கவும். 3-4 விசில் போதும். வெல்லத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தண்ணீருடன் காய்ச்சி, அதை வடிகட்டி கொள்ளவும் வேகவைத்த பயறு மற்றும் அரிசியை அடுப்பில் வைக்கவும்.

அதில் வெல்ல பாகத்தை சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு மிதமான தீயில் 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும். தீயை சிம்மில் வைத்த பிறகு தேங்காய்பாலை சேர்த்து மெதுவாக கிளறவும். இத்துடன் இஞ்சி துருவல், பெருங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இறுதியில் கஞ்சியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கவும். சூடாக பரிமாறவும்.

பயிறு கஞ்சி தாய்ப்பால் போன்றது, மேலும் இதன் சத்துக்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.

ருப்பு உருண்டை என்பது பாரம்பரிய தமிழ் சமையலில் மிகவும் பிரபலமான ஒரு மசாலா ஸ்நாக் ஆகும்.

பருப்பு உருண்டை

தேவை:

துவரம்பருப்பு – 1 கப்

சின்ன வெங்காயம் – ¼ கப் (சிறிதாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

இஞ்சி – ½ இன்ச் துண்டு

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி

இதையும் படியுங்கள்:
பருத்திப் பால், தினைமாவு புட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா?
traditional Kanchipuram dishes!

செய்முறை:

துவரம்பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டி பருப்பை தனியாக எடுக்கவும் ஒரு மிக்ஸி ஜாரில் துவரம்பருப்பை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும் அரைத்த பருப்பில் பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு, நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும். கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும் உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10–12 நிமிடங்கள் வேகவைக்கவும்.

இந்த உருண்டைகளை சாம்பார் அல்லது மோர்குழம்பில் வேக வைத்து பரிமாறலாம். உருண்டைகளை தேநீர் நேரத்தில் சட்னியுடன் பரிமாறலாம். சுவை அருமையாக இருக்கும்.

தன் தனித்துவம் மசாலா மற்றும் நெய் மணத்திலுள்ளது.

காஞ்சிபுரம் இட்லி

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்

உளுத்தம்பருப்பு – ½ கப்

தூளரிசி – ¼ கப்

சோடா உப்பு – 1 சிட்டிகை

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

ஜீரகம் – 1 தேக்கரண்டி

இஞ்சி சீவியது – ½ தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு சிட்டிகை

நெய் – 2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
சுவையான ரவை பணியாரம்-வெண்டைக்காய் சில்லி செய்யலாம் வாங்க!
traditional Kanchipuram dishes!

செய்முறை:

பச்சரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் தூளரிசியை தனித்தனியாக 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதை மிக்ஸியில் சேர்த்து, இட்லி மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். மாவை 6–8 மணி நேரம் புளிக்க வைக்கவும். புளித்த மாவில் மிளகுத்தூள், ஜீரகம், இஞ்சி சீவல், பெருங்காயம், உப்பு மற்றும் சோடா உப்பு சேர்க்கவும். நெய்யை சூடு செய்து, இதன் மேல் ஊற்றி நன்றாக கிளறவும்.

இட்லி தட்டுகளில் மாவை ஊற்றி, மிதமான சூட்டில் 15–20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். சூடான காஞ்சிபுரம் இட்லியை நெய் அல்லது தேங்காய் சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் பரிமாறலாம். இதன் மணமும் சுவையும் நெய்யுடன் சிறப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com