ஏர் பிரையரில் ஆரோக்கியமான உணவுகளை சமைக்கணுமா? இதோ சுவையான 3 வெஜ் ரெசிபிகள்!

3 delicious veg recipes
Healthy food in the air fryer
Published on

ஏர் பிரையர் பன்னீர் டிக்கா:

பன்னீர் 200 கிராம்

தயிர் 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்

தனியா தூள் 1 ஸ்பூன்

மிளகாய் தூள் 1 ஸ்பூன்

கரம் மசாலா 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

வெங்காயம் 1

தக்காளி 1

குடமிளகாய் 1

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொடிகளான தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், தேவையான உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பன்னீர் துண்டுகள் மற்றும் சதுரமாக நறுக்கிய காய்கறித் துண்டுகளையும் சேர்த்து 20 நிமிடங்கள் ஊறவிடவும். ஊறிய பன்னீர் மற்றும் காய்கறிகளை ஏர் பிரையர் கூடையில் பரவலாக வைத்து 180 டிகிரிC(350F) வெப்ப நிலையில் 15- 20 நிமிடங்கள் வேகவிட்டு இடையில் ஒருமுறை திருப்பி விடவும். சுவையான அதே சமயம் ஆரோக்கியமான பன்னீர் டிக்கா தயார்.

காய்கறி கட்லெட்:

உருளைக்கிழங்கு 2

கேரட் 1

பீன்ஸ் கால் கப்

பட்டாணி அரை கப்

வெங்காயம் 1

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் 1

உப்பு தேவையானது

மிளகாய்த்தூள்

கரம் மசாலா

சீரகத்தூள்

பிரட் தூள் தேவையான அளவு

கொத்தமல்லித் தழை சிறிது

எண்ணெய் சிறிது

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.. கேரட்டை துருவிக் கொண்டு, பீன்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

இதையும் படியுங்கள்:
புதுமையான மோர்க்களி ரெசிபி! வெறும் 15 நிமிடத்தில் தயார், ஈஸியா செய்யலாம்!
3 delicious veg recipes

வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மசாலா பொடிகள், தேவையான உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் கலந்து கலவையை விருப்பமான கட்லெட் வடிவத்தில் செய்து பிரெட் தூளில் பிரட்டி ஏர்பிரையர் கூடையில் பரவலாக வைக்கவும். ஏர் பிரையரை 180 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் முன்கூட்டியே சூடாக்கவும். அதில் கட்லட்களை வைத்து பத்து நிமிடங்கள் வேகவிடவும். இடையில் ஒருமுறை திருப்பிவிட மிகவும் ருசியான கட்லெட்கள் தயார்.

ப்ரோக்கோலி பைட்ஸ்:

ப்ரோக்கோலி 300 கிராம் உருளைக்கிழங்கு 2

ஸ்வீட் கார்ன் 1/2 கப்

பூண்டு 6 பற்கள்

கரம் மசாலா 1 ஸ்பூன்

மிளகாய் தூள் 1 ஸ்பூன்

சீரகத்தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

ஓட்ஸ் 1/4 கப்

ப்ரோகோலிக்கு பதிலாக காலிஃப்ளவரைக் கூட பயன்படுத்தலாம். அதேபோல் உருளைக்கிழங்கிற்கு பதில் சக்கரவள்ளி கிழங்கையும் பயன்படுத்தலாம். இவை ருசியை அதிகம் கூட்டும். ப்ரோகோலி, ஸ்வீட் கார்ன் மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசிக்கவும். வெந்த ப்ரோக்கோலியை தூண்டுகளாக நறுக்கவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
அப்பளத்தில் இருந்து கொழுக்கட்டை வரை! சமையல் குறிப்புகளின் பெட்டகம் இதோ!
3 delicious veg recipes

வாயகன்ற பாத்திரத்தில் நறுக்கிய ப்ரோக்கோலி, மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த கார்ன், உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், ஓட்ஸ் (பிரெட் தூளுக்கு பதிலாக) ஆகியவற்றை சேர்த்து சின்ன உருண்டைகளாக செய்யவும். இதனை 10 -15 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்தெடுக்கவும். ஏர் பிரையரை முன்கூட்டியே சூடாக்கி ப்ரோக்கோலி உருண்டைகளை வைத்து சிறிது எண்ணெயை மேலாக தெளித்து 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடங்கள் ஏர் ஃபிரை செய்யவும். மிகவும் ருசியான ப்ரோக்கோலி பைட்ஸ் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com