
கடையில் வாங்கும் அப்பளம், அப்பளப் பூ போன்றவற்றை பேப்பரை பிரித்துவிட்டு சிறிது காற்றில் வைத்திருந்து பின் டிஷ்யூ பேப்பரில் துடைத்துவிட்டு, பின் பொரிக்க வெள்ளையாக பொரிவதோடு, அடியில் வண்டல் படியாது.
மாவிளக்கு போடும்போது நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போடுவோம். சமயத்தில் திரி எரிந்து தீய்ந்த வாசனை வரும்.இதற்கு பதில் வாழைப்பழத் தோலை சதுரமாக கட் செய்து அதன் மேல் திரி போட்டு விளக்கு ஏற்றினால் தீய்ந்த வாசனை வராது.
சேமியா பாயசத்தை நிறைய பால் விட்டு செய்தாலும் அப்படியே பாத்திரத்தில் வைக்கும் போது கெட்டியாகி விடும்.சேமியாவை பதமாக ரொம்ப குழையாமல் வேகவிட்டு சர்க்கரை,பால் சேர்த்து இறக்கி அதை ஹாட் பேக்கில் ஊற்றி மூடி வைத்து விட பரிமாறும் போது கெட்டியாகாமல் சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டை மேல் மாவு தயாரிக்கையில் மாவில் உப்பு, கொஞ்சம் வெண்ணைய் சேர்த்து பின் சூடான நீர் ஊற்றி பிசைந்து வைக்கவும். அதில் கொழுக்கட்டை செய்ய விண்டு போகாமல், வெந்ததும் சாஃப்ட் ஆக இருக்கும்.
எந்தவித சுண்டல் வகைகளாக இருந்தாலும் கடுகு தாளிக்கையில், கரம் மசாலா அல்லது ஆம்ச்சூர் பொடி, தே துருவலை சேர்த்து வறுத்து சுண்டலில் சேர்க்க நீண்ட நேரத்திற்கு கெடாமல் நன்றாக இருக்கும்.
சுண்டல், பொரியல் போன்றவற்றிற்கு கருவேப்பிலை தாளித்து அப்படியே சேர்க்காமல் கருவேப்பிலையை கையால் நொறுக்கி விட்டு சேர்க்க வாசனையாக இருப்பதோடு கருவேப்பிலையை யாரும் ஒதுக்க வேண்டி இருக்காது.
கொழுக்கட்டைக்கு பூரணம் தளர்ந்து போய்விட்டால் சிறிது கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்து அதனுடன் சேர்த்து கிளறிவிட்டால் கெட்டியாகிவிடும்.
பகாளாபாத் தயாரிக்கையில் அரிசியை வேக விடும்போது ஜவ்வரிசி சிறிது சேர்த்து வேகவிட சாதம் குழைவாகவும், கூடுதல் சுவையுடனும் இருக்கும்.
ஒரு டம்ளர் கெட்டி அவலை இரண்டு டீஸ்பூன் நெய்யில் வறுத்து அதனுடன் ஒரு கைப்பிடி உடைத்த கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலையை பொரித்து சேர்த்து உப்பு, காரம் கலந்து வைக்க சுவையான,எளிதான அவல் மிக்சர் தயார்.
கொத்தமல்லி சேர்க்கும் சமையலில் கொத்தமல்லி இல்லை என்றால் தனியாவை வறுத்து பொடித்து சேர்க்க சுவை நன்றாக இருக்கும்.
குளிர்காலத்தில் செரியாமை மால் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் பொட்டுக்கடலையை மாவாக்கி அதை கஞ்சாக்கி கொடுக்க உடனே குணமாகும்.
பிரெட் துண்டுகள் காய்ந்துவிட்டால் அதை வீணாக்காமல் மிக்ஸியில் போட்டு ப மிளகாய்,உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி அதனுடன் வெங்காயம் அரிந்தது, கருவேப்பிலை இஞ்சி சேர்த்து கலந்து எண்ணையில் பக்கோடாவாக பொரித்து பரிமாற சுவையாக இருக்கும்.பாலில் சில நெல் மணிகளை போட்டுவைக்க கெடாமல் இருக்கும்.
எந்தவித பலகாரத்திற்கும் ஃபுட்கலர் சேர்க்கும்போது அதிகமாகிவிட்டால் ப்ரெட் துண்டு ஒன்றை வைத்து மாவில் ஒற்றி எடுத்தால் மாவில் உள்ள அதிகப்படியான கலர் உறிஞ்சப்பட்டு நார்மலாகிவிடும்.