
வெந்தயக்கீரை துவையல்.
தேவையான பொருட்கள்;
வெந்தயக் கீரை - 1 கட்டு.
துவரம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்.
சீரகம் - 1 டீஸ்பூன்.
பெருங்காயம் - சிறுதுண்டு
வரமிளகாய் - 6
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்.
புளி, உப்பு - சிறிதளவு.
எண்ணெய் - சிறிது.
செய்முறை;
வெந்தயக் கீரையை கழுவி, பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் நறுக்கிய வெந்தயக் கீரையை சிறு தீயில் கிளறி வதக்கி எடுக்கவும். பின், சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம் பொரித்து, அதில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து மிளகாய், சீரகம் சேர்த்து வறுக்கவும். பின் அதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி ஆறவிட்டு புளி, உப்பு அளவாக சேர்த்து மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்லது.
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு
துவரம்பருப்பு - 1/4 கப்.
வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 4
வரமிளகாய் - 2
கடுகு, எண்ணெய், உப்பு - தேவைக்கு
அரைக்க:
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் -3 .
சீரகம் -ஒரு டீஸ்பூன்
தக்காளி - 1. (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து கழுவி, பொடியாக நறுக்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பருப்பை தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். அரைக்க வேண்டிய பொருட்கள் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கிள்ளி போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கீரையை சேர்த்து வதக்கி, அரைத்த விழுதையும் தண்ணீரையும் இதில் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் வெந்த பருப்பை மசித்து சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான சத்தான வெந்தயக்கீரை பருப்பு கூட்டு ரெடி. சாதத்தில் நெய்விட்டு கூட்டு பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். வயிற்றுக்கு, குடலில் ஏற்படும் கடுப்புக்கு பெண்களின் இடுப்பு வலிக்கு இதமாக இருக்கும். வாய்ப்புண்கள் குணமாகும்.
வெந்தயக் கீரை சப்பாத்தி
தேவையான பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை -ஒரு கப்
கோதுமை மாவு -ஒரு கப்
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
எண்ணெய் ,உப்பு -தேவைக்கு
செய்முறை:
அது வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெந்தயக்கீரை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆறிய பின் சப்பாத்தி மாவில் போட்டு தண்ணீர் தெளிந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து சப்பாத்திகளாக இட்டு தோசைக் கல்லில் போட்டு எண்ணெய்விட்டு எடுக்கவும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் தயிர் பச்சடி தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும். சத்தான வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி. வெந்தயக் கீரையை வாரம் ஒரு நாள் சாப்பிட வயிற்று பிரச்னைகள் வராது.