
சரியாக லட்டுகள் பிடிக்க வரலையா? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து பிடித்தால் லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் சுவையாக இருக்கும்.க்கு பாலுக்குப் பதில் பால் பவுடர் சேர்த்தால் பர்பி நல்ல வெள்ளை நிறமாக இருக்கும்.
கோதுமை, மைதா அல்வா செய்யும் போது, நீர்த்து விட்டால் சோள மாவைக் கரைத்துச் சேர்த்தால் கெட்டியாகி விடும்.
சரியாக லட்டுகள் பிடிக்க வரலையா? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து பிடித்தால் லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் சுவையாக இருக்கும்.
கேசரி, ஜிலேபி, அல்வா போன்றவற்றில் கலர் பவுடர் சேர்ப்பதற்கு பதில் கேரட்டை சாறு எடுத்துச்சேர்த்தால் சுவை கூடும்.
ரவா உருண்டை செய்யும்போது தேங்காய் கொப்பரையையும் நெய்யில் வதக்கிப் போட்டுச்செய்தால், கூடுதல் சுவையாக இருக்கும்.
கேசரி கிண்டும்போது பேரீச்சம் பழத்தையும் பொடியாக அரிந்து சேர்த்தால் சுவை கூடும்.
கேரட், பீட்ரூட் அல்வா செய்யும்போது சர்க்கரையின் அளவு கூடிவிட்டால் முந்திரி, பாதாம் கலவையை சேர்க்க இனிப்பு மட்டுப்படும்.
எந்த ஸ்வீட் செய்தாலும், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொண்டு, கற்கண்டை பொடி செய்து சேர்த்தால் சுவை கூடும்.
குலோப் ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால், பாகு உறையாமலும், நீண்ட நேரம் கெடாமலும் இருப்பதுடன், சுவையும் அபாரமாக இருக்கும்.
பாதுஷா செய்யும்போது மாவில் கொஞ்சம் தயிர் விட்டுப் பிசைந்தால் பாதுஷா மிகவும் மிருதுவாக இருக்கும்.
ஜாங்கிரி உடையாமல் வர வேண்டுமா? உளுந்து விழுதுடன் ஒரு ஸ்பூன் அரிசிமாவைக் கலந்தால் போதும்.
எந்த விதமான இனிப்பு செய்வதாக இருந்தாலும் நான்- ஸ்டிக் பேனில் செய்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதோடு எண்ணெயும் அதிகம் குடிக்காது.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து, சிறிதளவு காரத்தூள், உப்பு சேர்த்து வடை போலத்தட்டி இட்லி மாவின் நடுவில் வைத்து வேக வைத்து எடுத்தால் " வடா பாவ்" போல ருசியாக இருக்கும்.
குக்கர் காஸ்கட் பயன்படுத்தாத நேரங்களில் அதை பச்சைத் தண்ணீரில் போட்டு வைத்தால் காஸ்கட் நீண்டநாள் உழைக்கும்.
மீதமான தேங்காய் சட்னியைக் கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர்க்குழம்பு தயார்.
வெறும் வாணலயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பருப்புகளை போட்டு மூடி வைக்கவும். நன்கு ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். இப்படி செய்தால் அவற்றில் பூச்சி, வண்டுகள் வராமல் இருக்கும்.பிளாஸ்டிக் பாக்கெட்டில் வரும் எண்ணெய் வாங்குவது பலரது வழக்கம். எண்ணெயை பாட்டிலில் நிரப்பிய பிறகு, அந்த பிளாஸ்டிக் கவரை உள்புறமாக திருப்பி, வீட்டில் உள்ள இரும்பு ஜன்னல்களின் கம்பிகள், கதவுகளின் ஓரங்கள், சாவித்துவாரங்களில் தேய்த்துவிட்டால் சீக்கிரம் துருப்பிடிக்காது. பளிச்சென்றும் ஆகிவிடும்.
சமைக்கும் பாத்திரத்தில் அடிப்பிடித்து விட்டதா? துணி துவைக்கும் சோப்பு பவுடரை பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பிறகு அந்தப்பாத்திரத்தை நன்கு தேய்த்துக் கழுவினால் பாத்திரம் "பளிச்" சென்று ஆகிவிடும்.
பொரியலில் உப்பு அதிகமாகிவிட்டதா? பொரியலின் அளவுக்கேற்ப இரண்டு டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாகப் பொடிக்கவும். அந்தப்பொடியை பொரியல் வெந்தபிறகு சேர்த்து நன்கு கிளறிவிட்டால் போதும், உப்பு மட்டுப்படும்.