வித்தியாசமான சுவையில் அசத்தும் 3 சட்னி வகைகள்!

ருசி கூட்டும்  3  சட்னி வகைகள்! 
மாங்காய் மல்லி சட்னி
மாங்காய் மல்லி சட்னிImage credit - youtube.com

மாங்காய் மல்லி சட்னி:

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லித் தழை -ஒரு கைப்பிடி

மாங்காய்த் துண்டுகள்- ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய், வர மிளகாய் தலா -மூன்று

உப்பு -தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து  அரைத்து  ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து ,  தாளிப்பு கரண்டியில் எண்ணெய்யில் கடுகு தாளித்து சேர்க்க வேண்டியது தான். 

வறுத்தரைத்த தேங்காய்ச் சட்னி:

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் -அரை மூடி

பொட்டுக்கடலை- ஒரு கைப்பிடி

சின்ன வெங்காயம் -10 அரிந்தது

புளி-2 மிளகளவு

பச்சை மிளகாய்- 8

பூண்டு பல்-நான்கு

இஞ்சி- சிறிய துண்டு

 உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சின்ன வெங்காயம் வதக்கவும். பிறகு தேங்காய் துருவல் முதல் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சாமான்களையும் நன்றாக வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்து கறிவேப்பிலை தாளித்தால் போதும் . சுவை அள்ளும். இட்லி, தோசை, இடியாப்பம் ,கார பணியாரம் அனைத்திற்கும் இசைவான சட்னி இது.

இதையும் படியுங்கள்:
இந்த சம்மர் சீசனில் ஜில்லுனு ஜூஸ் குடிக்கலாமா?
மாங்காய் மல்லி சட்னி

கருமல்லி சட்னி:

தேவையான பொருட்கள்:

மல்லி விதை- ஒரு டேபிள் ஸ்பூன்

குண்டு வரமிளகாய்- ஏழு

இஞ்சி- சிறிய துண்டு

புளி- பாக்களவு 

தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்

வெல்லம்- ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு , எண்ணெய்- தேவைக்கு

கருமல்லி சட்னி
கருமல்லி சட்னிImage credit - youtube.com

செய்முறை:

கொத்தமல்லி விதையை வெறும் வாணலியில்  நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வர மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடிக்கவும். நன்கு பொடிந்தவுடன் தேங்காய் துருவல் இஞ்சி சேர்த்து அரைக்கவும். பிறகு புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும். 

வாணலியில் தாராளமாக எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை அதில் போட்டு வதக்கவும். நன்றாக சுண்டி வரும் பொழுது வெல்லத்துருவலை சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும். ரசம், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும். அடைக்கும் நன்றாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com