
ஆப்பிள் ஜாம்
தேவையான பொருட்கள்.
ஆப்பிள் - 1/2 கிலோ
சர்க்கரை - 1/2 கிலோ
எலுமிச்சம்பழம் - 1
செய்முறை:
அடிகனமான தோல் சீவி பொடியாக நறுக்கிய ஆப்பிளை சுமார் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். நன்கு ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஆப்பிள் விழுது, சர்க்கரையும் சேர்த்து நன்கு கிளறி, கெட்டியானதும், அதில் 1 டீஸ்பூன் சிட்ரிக் ஆசிட், 1 டீஸ்பூன் ஆப்பிள் எசன்ஸ், கலர் ஏதாவது சிறிது தேவைப்பட்டால் சேர்த்து இறக்கி சிறிது எலுமிச்சைசாறு கலந்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றி வைக்கவும். ருசியான ஆப்பிள் ஜாம் ரெடி. பிரட்டில் தடவி சாப்பிட ருசியாக இருக்கும்.
தக்காளி ஜாம்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5
சர்க்கரை - 1/4 கப்
ஏலத்தூள் - 1/2 ஸ்பூன்.
கிராம்பு - 2
நெய் - 1 ஸ்பூன். முந்திரி - 5
செய்முறை:
தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தோல் உரித்து ஆறியதும், மிக்ஸியில் நைசாக அரைத்து ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கெட்டியானதும் ஏலத்தூள் கிராம்பு சேர்த்து, நெய் விட்டு முந்திரி பருப்பு சேர்த்து இறக்கவும்.
சுவையான தக்காளி ஜாம் ரெடி. சப்பாத்தி,பிரட், பன்னுக்கு நல்ல காம்பினேஷன்.
மாம்பழ ஜாம்
தேவையான பொருட்கள்:
பழுத்த மாம்பழம் - 3
சர்க்கரை - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்.
செய்முறை:
இங்கு பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி துண்டு துண்டாக வெட்டி மிக்ஸியில் விழுதாக அரைக்கவும் .அடுப்பில் கனமான பாத்திரம் வைத்து அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும். சர்க்கரை கரைந்து கெட்டியானதும் எலுமிச்சை சாறு சேர்த்து கைவிடாமல் கிளறவும். மிதமான சூட்டில் கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியான பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் விட்டு பார்த்தால் விலகி கீழே வழியாமல் அப்படியே இருக்கும்.
அதுதான் பதம் ஆறிய உடன் கண்ணாடி பாட்டில் மாற்றி வைக்கவும். அருமையான சுவையில் வீட்டிலேயே தயாரித்த மாம்பழம் ஜாம் தயார். சப்பாத்தி, பிரட் அனைவரும், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொழுது தண்ணீர் கலந்து மாம்பழ ஜூஸ் செய்து சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்துமூன்று மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.
பப்பாளி ஜாம்.
தேவையான பொருட்கள்:
பழுத்த பப்பாளி பழம் - 1 1/2 கப்
சர்க்கரை - 1 கப்.
எலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்.
செய்முறை:
பழுத்த பப்பாளியை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைக்கவும்.
அரைத்த பப்பாளியை ஒரு வாணலியில் போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து நன்கு கெட்டியாகி ஜாம் பதம் வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சை சாறு கலந்து நன்கு கிளறவும். ஆறியதும் பாட்டிலில் போட்டு வைத்து பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
சத்தான சுவையான பப்பாளி ஜாம் ரெடி. தோசை, இட்லி, பிரட், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும்.