வித்தியாசமான நாலு வகை கீரை துவையல்கள்!

healty samayal tips
Thuvayal recipes
Published on

அரைக்கீரை துவையல்

தேவை:

நறுக்கிய அரைக்கீரை - 2 கப் 

உளுந்தம் பருப்பு - அரை கப் 

புளி - கோலி குண்டு அளவு

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

வர மிளகாய் - 2  

 உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

அரைக்கீரையை நீரில் கழுவி, நீரை வடித்து, வேகவைக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வரமிளகாய், உளுந்தம் பருப்பு, புளி போட்டு வறுத்து, வெந்த கீரையை உப்பு சேர்த்து அரைக்கவும். சுவையான, சத்தான அரைக்கீரை துவையல் தயார்.

வல்லாரை துவையல்

தேவை:

பொடியாக நறுக்கிய வல்லாரை கீரை - 1 கப் 

புளி - கோலி குண்டு அளவு 

வர மிளகாய் - 3

நறுக்கிய வெங்காயம் - 1

தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், புளி, வல்லாரைக்கீரை ஆகியவற்றை போட்டு வதக்கி அரைக்கவும். பின்னர் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், தாளித்துக் கொட்டி, துவையலில் சேர்க்கவும். கமகம வல்லாரைக் கீரை துவையல் தயார்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே சுவையான மாம்பழ ஜாம் செய்யலாம் வாங்க!
healty samayal tips

தூதுவளை துவையல்

தேவை:

நறுக்கிய தூதுவளைக் கீரை - 1 கப் 

வர மிளகாய் - 3 

புளி - கோலி குண்டு அளவு 

நறுக்கிய வெங்காயம் - 1

தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

வாணலியில் எண்ணெய் விட்டு, வரமிளகாய், வெங்காயம், புளி, தூதுவளை கீரை போட்டு வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் இதில் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, துவையலில் சேர்த்தால், சத்தான தூதுவளைக் கீரை தயார்.

முருங்கைக்கீரை துவையல் 

தேவை:

நறுக்கிய முருங்கைக்கீரை - 1 கப்  

தேங்காய் துருவல் - அரை கப்  

புளி - கோலி குண்டு அளவு

தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு , பெருங்காயத்தூள் 

 நறுக்கிய பச்சை மிளகாய் -  3 

உப்பு, எண்ணெய்  - தேவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
சத்து நிறைந்த இரண்டு வகை புட்டுகள் ருசிப்போமா..?
healty samayal tips

செய்முறை: 

முருங்கைக் கீரையை சுத்தம் செய்து,  வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, முருங்கைக் கீரையுடன் பச்சை மிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும். என்னால் இதனுடன் கடுகு உளுந்தம் பருப்பு பெருங்காயத்தூள் தாளித்து துவையலில் சேர்க்கவும். எலும்புகளை வலுவாக்கும் முருங்கைக்கீரை துவையல் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com