
வெந்தய துவையல்
தேவை:
வெந்தயம் - 4 ஸ்பூன் உளுந்தம் பருப்பு - 4 ஸ்பூன்
கடுகு - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிதளவு
பெரும்காயதூள் - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
உப்பு - தேவைக்கு
அடுப்பில் வாணலி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்.
வெந்தயம் லேசாக சூடானதும் அத்துடன் உளுத்தம்பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல், வெல்லம் சேர்த்து சேர்த்து வறுக்கவும்.
அடுப்பை ஆஃப் செய்து பெருங்காயதூள், தேவையான உப்பு சேர்த்து ஆறவிடவும். ஆறியதும் அத்துடன் புளி சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, அதன் பிறகு கொஞ்சம் தண்ணீர் தெளித்து கட்டி துவையலாக அரைத்து எடுத்து வைக்கவும்... சாதத்துடன் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
வெந்தய பொங்கல்
தேவை:
பச்சரிசி 2 கப்
வெந்தயம் 2 ஸ்பூன்
மிளகு சீரகப்பொடி ஒ1ரு ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
தேங்காய் பால் அரை கப்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியை களைந்து வெந்தயத்துடன் குக்கரில் வேகவைக்கவும். வெந்தபின் தேங்காய் பால், உப்பு, நெய், மிளகு, சீரக பொடி சேர்த்து இறக்கி வைத்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும் சுவையான, மணமான, சத்தான வெந்தய பொங்கல் தயார்.
வெந்தய பர்பி
தேவை:
வெந்தயம் - ஒரு கப்
கடலைப் பருப்பு - 2 கப்
நெய் - ஒரு கப்
சர்க்கரை - 4 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரிப் பருப்பு ஒடித்தது - 8
செய்முறை:
கடலை பருப்பையும், வெந்தயத்தையும் ரவைபோல உடைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும், உடைத்த கடலை பருப்பு போட்டு, முக்கால் பதம் சிவந்ததும், வெந்தய ரவையை போட்டு சிவக்க வறுக்கவும். சர்க்கரையைக் கம்பி பாகாக காய்சசி, அதில் வருத்த கடலை பருப்பு வெந்தயத்தை போட்டு நெய் விட்டு, கிளறவும். பர்பி பதம் வந்ததும், இறக்கி ஏலக்காய் தூள், முந்திரி பருப்பு சேர்த்து தட்டில் கொட்டி பரப்பி வில்லைகள் போடவும். சத்தான, சுவையான, வித்தியாசமான வெந்தய பர்பி தயார்.
வெந்தயக் களி
தேவை:
கைக்குத்தல் அரிசி - 300 கிராம்
நல்லெண்ணெய் - 50 மி.லி
கறுப்பு உளுந்தம் பருப்பு - 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 300 கிராம்
வெந்தயம் - 50 கிராம்
செய்முறை:
கைக்குத்தல் அரிசியை நன்கு ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் இரவே ஊறவைத்த வெந்தயம், கறுப்பு உளுந்தம் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, வாணலியில் ஊற்றி, அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, கரண்டியால் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
மாவுக் கரைசல் கெட்டியாக களிபோலத் திரண்டு வரும்போது, அடுப்பை சிம்மில் வைத்து, நாட்டு சர்க்கரையைத் தூவி, கட்டிகள் வராத வண்ணம் கிண்ட வேண்டும்.
களி பதத்திற்கு வந்ததும், தேவையான அளவில் உருண்டைகாளக உருட்டிக் கொள்ளலாம். சுவையான, சத்தான வெந்தயக்களி தயார். கோடை வெயிலுக்கு ஏற்ற உணவு இது.