
வாழைப்பழ சப்பாத்தி
தேவை:
வாழைப்பழம் - 2
கோதுமை மாவு - 1 கப்
பால் - அரை கப்
ஏலக்காய் தூள் - அரை மஞ்சள் ஸ்பூன்
உப்பு, - ஒரு சிட்டிகை
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைப்பழங்களைத் தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். கோதுமை மாவில் வாழைப்பழத் துண்டுகள், உப்பு, ஏலக்காய்தூள் சேர்த்து, சிறிது நெய் சேர்த்து, பாலைத் தெளித்து, தெளித்து பிசையவும். அரைமணி நேரம் கழித்து மாவை உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாக தேய்த்து, தவாவில் போட்டு, நெய் தடவி, இருபுறமும் வேகவத்து எடுக்கவும். வித்தியாசமான சுவைகொண்ட வாழைப்பழ சப்பாத்தி ரெடி.
ஸ்வீட் சப்பாத்தி
தேவை:
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - சிறிது
பால் - அரை கப்
கோதுமை மாவு - 2 கப்
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பாலில் சர்க்கரையை பொடித்து சேர்க்கவும். ஏலக்காய் தூளையும் சேர்க்கவும். அந்தப் பாலைத் தெளித்து, தெளித்து கோதுமை மாவை நன்கு பிசையவும். அரைமணி நேரம் ஊறிய பிறகு, மாவை சப்பாத்திகளாக தோய்த்து, சூடான தவாவில் போட்டு, நெய் தடவி, இரு புறமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான ஸ்வீட் சப்பாத்தி தயார்.
மோர் சப்பாத்தி
தேவை:
கோதுமை மாவு - 2 கப்
மோர் - 2 கப்
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
சுக்குத்தூள் - அரை ஸ்பூன்
செய்முறை:
மோரில் மிளகு, சீரகத்தூள், சுக்குத்தூள், உப்பு சேர்த்து கரைக்கவும். அதை கோதுமை மாவில் விட்டு, நன்கு பிசையவும். அரைமணி நேரம் கழித்து, மாவை சப்பாத்திகளாக இட்டு தவாவில் ஒவ்வொன்றாக போட்டு, இருபுறமும் எண்ணெய் தடவி, வேகவைத்து எடுத்தால், வித்தியாசமான சுவைகொண்ட, மோர் சப்பாத்தி தயார்.
கதம்ப சப்பாத்தி
தேவை:
கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா பொடியாக நறுக்கியது - 1 கப்
கோதுமை மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கோதுமை மாவில், நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா, பச்சை மிளகாயை கலந்து, உப்பு கலந்த நீரை தெளித்து, தெளித்து, நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு மாவை சப்பாத்திகளாக இட்டு, தவாவை சூடாக்கி, ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இரும்புச்சத்து நிறைந்த சப்பாத்தி இது.