வீடே மணக்கும் பழ அல்வாக்கள்: விருந்தினர்களை அசத்த 4 எளிய வழிகள்!

Fruit halvas
Fruit halvas
Updated on

மாதுளை அல்வா

தேவை:

மாதுளை முத்துக்கள் – 2 கப்

ரவை – ½ கப்

பால் – 1 கப்

சர்க்கரை – 1 கப்

நெய் – 3 டீஸ்பூன்

முந்திரி, திராட்சை – சிறிதளவு

ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

செய்முறை:

மாதுளை முத்துக்களை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி ரவையை லேசாக வறுக்கவும். பாலை சேர்த்து கிளறி, ரவை வேகும் வரை சமைக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

அதனுடன் மாதுளை சாறை சேர்த்து தொடர்ந்து கிளறவும். பின்னர் அதில் நெய் விட்டு, கலவை பாத்திரத்தை விட்டு விலகும் போது, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

சிறிது நேரம் ஆறியதும் வில்லைகள் போடவும். சுவையான சத்தான மாதுளை அல்வா ரெடி.

பப்பாளி அல்வா

தேவை:

பப்பாளி பழ துண்டுகள் – 3 கப்

சர்க்கரை – 3/4 கப்

நெய் – 4 ஸ்பூன்

பால் – காய்ச்சியது 1/2 கப்

ஏலக்காய் தூள் – சிறிதளவு

முந்திரி – 7

பாதாம் பருப்பு – 7

இதையும் படியுங்கள்:
கிராமத்து கைமணம் மாறாத மொச்சை காரக்குழம்பு ரகசியம்!
Fruit halvas

செய்முறை:

முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். அதிகம் பழத்த பழமாக இல்லாமல் சற்று காய் பதத்தில் உள்ள பப்பாளியை எடுத்துக்கொள்ளவும். பாதாம், முந்திரி பருப்புகளை மெலிதாக நறுக்கி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு வதக்குங்கள்.பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேகவிடவும்.

பப்பாளி நன்கு குழைந்து வரும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறிவிடவும். அல்வா சுண்டி வரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவிடவும். பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொழுது முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் தூவி கிளறி இறக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்.

வாழைப் பழ அல்வா

தேவை:

வாழைப்பழம் -

சர்க்கரை - 1/4 +1 கப் கப்

நெய் - 1 கப்

ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி

நீர் - 1/4 கப்

முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பானில் நெய் தடவி தனியே வைக்கவும். வேறொரு நான்ஸ்டிக் பானில் நெய்விட்டு சூடாக்கவும் அதனுடன் மசித்த வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து நன்கு சேர்க்கவும். கலவை திரண்டு வரும் வரை வேகவைக்கவும்

ஒரு சாஸ் பானில் சர்க்கரை எடுத்துக்கொண்டு, நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை வேக வைக்கவும். பின்பு அதனை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நெய் விட்டு நன்கு கிளறவும்

பானில் நெய் விட்டு பாதாம், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக பொரிக்கவும். நெய்யுடன் சேர்த்து அல்வாவில் ஊற்றி திரண்டு வரும் வரை நன்கு கிளறவும் பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு அல்வாவை நெய் தடவிய பானில் வைத்து ஆறியதும் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்

சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

அத்திப்பழம் அல்வா

தேவை:

அத்திப்பழம் — 100 கிராம்

பேரீச்சம்பழம் — 50 கிராம்

வெல்லம் — 150 கிராம்

ஏலக்காய்த்தூள் — ரு டீஸ்பூன்

பால் — 200 மி.லி.

நெய் — 2 டீஸ்பூன்

முந்திரி — 5

சுக்குத்தூள் — கால் டீஸ்பூன்

பாதாம் — 5

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் - காஜு மட்டர் மசாலா & தந்துாரி மலாய் புரோகொலி ரெசிபி!
Fruit halvas

செய்முறை:

வெது வெதுப்பான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்த நறுக்கிய அத்திப்பழம், பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் நன்கு மைய அரைக்கவும். கடாயில் நெய்யைச் சேர்த்து 1 டீஸ்பூன் நறுக்கிய முந்திரி, பாதாமை நன்கு வதக்கவும். வதக்கியவைகளை தனியே எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். அதனுள் காய்ச்சியப்பாலைச் சேர்த்துகிளறவும். ஓரளவு திக்காகி கெட்டியானவுடன் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதனுள் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூளைச் சேர்க்கவும்.

நெய்யில் வறுத்த முந்திரி, பாதாமைச் சேர்த்துக்கிளறவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சுவையான அத்திப்பழ அல்வா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com