கிராமத்து கைமணம் மாறாத மொச்சை காரக்குழம்பு ரகசியம்!

Mochai kaara kuzhambu
Mochai kaara kuzhambu
Published on

மொச்சை மசாலா ரைஸ்

தேவையானவை:

பாசுமதி அரிசி -1/2கி, உரித்த மொச்சை _1கப், இஞ்சி பூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன், பட்டை, ஏலம், கிராம்பு -தலா2, பமிளகாய் -6, புதினா மல்லி அரிந்தது-1/4கப், பெரிய வெங்காயம் -2, நெய்-3டேபிள் ஸ்பூன்,, தக்காளி -2அரிந்தது, உப்பு -தேவைக்கு.

செய்முறை:

அரிசியை 20நிமிடம் ஊறவைக்கவும். பின் உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி பட்டை ஏலம் கிராம்பு தாளித்து வெங்காயம் வதங்கியதும் அதில் ப மிளகாய், தக்காளி அரிந்தது போட்டு நன்கு வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்ட், புதினா மல்லி சேர்த்து வதக்கி பின் வேகவைத்த மொச்சை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது நேரம் கழித்து வடித்த சாதத்தை போட்டு கிளறி நன்றாக சேர்ந்து வந்ததும் புதினா,மல்லி தூவி இறக்கவும்.

மொச்சை குருமா:

மொச்சை -200கிராம், டபுள் பீன்ஸ் -200கிராம், வெந்த உருளைக்கிழங்கு -3, தக்காளி -200கிராம், ப மிளகாய் -4, பெரிய வெங்காயம் -5, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய், முந்திரி அரைத்த விழுது -1/2கப், உப்பு, மல்லி, புதினா தேவைக்கு.

குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை ஏலம் கிராம்பு தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். உப்பு, அரைத்த விழுது, தயிர், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடி கொதிக்கவைக்கவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் - காஜு மட்டர் மசாலா & தந்துாரி மலாய் புரோகொலி ரெசிபி!
Mochai kaara kuzhambu

மொச்சை ஃப்ரை:

மொச்சை -200கிராம், மிளகாய் தூள் -2டீஸ்பூன் பெருங்காயத்தூள், சோளமாவு-2டீஸ்பூன், எண்ணெய் -பொரிக்க.

அரிசி மாவு, சோள மாவுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். வெந்த மொச்சை முன் இந்தக் கலவையை சேர்த்து பிசிறி எண்ணையில் பொரித்தெடுக்கவும். பின் கருவேப்பிலை, கரம் மசாலா அல்லது ஆம்ச்சூர் பவுடர் தூவி கலந்து பரிமாறவும்.

மொச்சை காரக்குழம்பு:

மொச்சை பயறு-200கிராம், சிறிய வெங்காயம் -10, புளி-பெரிய நெல்லிக்காய் அளவு, தக்காளி -1/2கப், அரிந்தது, தேங்காய் அரைத்த விழுது-1/2கப், மஞ்சள் தூள், குழம்புத்தூள்-4டேபிள் ஸ்பூன், சாம்பார் பொடி-1டீஸ்பூன்.

இதையும் படியுங்கள்:
லஞ்ச் பாக்ஸ்க்கு இத விட பெஸ்ட் ரெசிபி இல்லை... புரதச்சத்து நிறைந்த பிளாக் சன்னா புலாவ்!
Mochai kaara kuzhambu

செய்முறை:

மொச்சை யை உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும். வாணலியில் ந எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குழம்பு தாளிப்பு வடகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் தக்காளி அரிந்ததை சேர்த்து நன்கு கிளறிவிடவும். கருவேப்பிலை போட்டு புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு, கார தூள், குழம்பு தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மொச்சை வெந்தது தேங்காய் அரைத்ததை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு கொதிக்கவிடவும். கொதித்து குழம்பு திக்கான தும் கருவேப்பிலை தூவி இறக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com