

காஜு மட்டர் மசாலா ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.நறுக்கிய பெரிய வெங்காயம் 2
2.நறுக்கிய பெரிய தக்காளி 2
3.உரித்த பூண்டு பற்கள் 10
4.முந்திரி 200 கிராம்
5.பிரிஞ்சி இலை 2
6.பட்டை ஒரு அங்குல துண்டு 1
7.கிராம்பு 2
8 ஏலக்காய் 2
9.காஷ்மீரி சில்லி 2
10.மொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
11.பட்டர் 150 கிராம்
12.சிவப்பு மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
13.மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
14.பச்சைப் பட்டாணி 120 கிராம்
15.கரம் மசாலா தூள் 1 டீஸ்பூன்
16.ஃபிரஷ் கிரீம் 1 டேபிள் ஸ்பூன்
17.உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் முப்பது கிராம் பட்டர் சேர்த்து சிறு தீயில் அடுப்பில் வைக்கவும். பட்டர் உருகியதும் அதில் பூண்டு, வெங்காயம், தக்காளி, 100 கிராம் முந்திரி, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், காஷ்மீரி சில்லி, மொத்தமல்லி இலை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும், கீழே இறக்கி வைத்து ஆற விடவும். பின் அதை மிக்ஸியில் போட்டு மசிய அரைத்தெடுக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள பட்டரை சேர்க்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்த மசாலாவை போட்டு நன்கு கலந்துவிடவும். அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின் பச்சைப் பட்டாணி, நூறு கிராம் முந்திரி சேர்த்து சிறு தீயில் வேக விடவும். வெந்ததும், கரம் மசாலா தூள், ஃபிரஷ் கிரீம், தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பு சேர்த்துக் கலந்து இறக்கி விடவும். சுவை மிக்க காஜு மட்டர் மசாலா தயார். அதில் மல்லி இலைகள் தூவி அலங்கரித்து, ரொட்டி, பரோட்டாவுடன் சேர்த்து உண்ணவும்.
தந்தூரி மலாய் புரோகொலி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.புரோகொலி ஃபுளோரெட் 250 கிராம்
2.ஃபிரஷ் கிரீம் ½ கப்
3.கெட்டித் தயிர் 2 டேபிள் ஸ்பூன்
4.இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
5.மக்காச்சோள மாவு 1 டேபிள் ஸ்பூன்
6.துருவிய சீஸ் 1 டேபிள் ஸ்பூன்
7.வெள்ளை மிளகு தூள் 1 டீஸ்பூன்
8.கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்
9.பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
10.லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன்
11.உப்பு தேவையான அளவு
செய்முறை:
சிறிது உப்பு கலந்த நீரை கொதிக்கவைத்து அதில் புரோகொலி ஃபுளோரெட்களை சேர்த்து ஒரு நிமிடம் வைத்து ப்ளான்ச் செய்யவும். பின் வெளியில் எடுத்துப் பிழிந்து நீரில்லாமல் உலர்த்திக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தயிர், சீஸ், கிரீம், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோள மாவு, மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலா பவுடர் மற்றும் லெமன் ஜூஸ் கலந்து பேஸ்ட் போல் ஆக்கி அதில் ப்ளான்ச் செய்த புரோகொலி ஃபுளோரெட்களை போட்டு முப்பது நிமிடங்கள் ஊற (marinade) வைக்கவும்.
பின் அவைகளை, ஓரம் மொறு மொறுப்பாகும் வரை கிரில் பண்ணவும். பிறகு பட்டரை உருக்கி ஃபுளோரெட்கள் மீது பிரஷ்ஷால் தடவிக்கொள்ளவும். ஃபுளோரெட்களின் உட் பகுதி உறுதியாகவும் ஜூஸியாகவும் இருக்க வெளிப்புறம் ஸ்மோக்கியான வாசனையுடன் கிரஞ்சியாக இருக்கும். கொத்தமல்லி சட்னி தொட்டு சாப்பிட ஒரு திருப்தியான ஸ்டார்டரை உண்டு மகிழ்ந்த உணர்வு உண்டாகும்.