4 வித போண்டா வகைகள் கலக்கல் சுவையில்..!

amazing bonda recipes
Variety Bonda recipes
Published on

தேங்காய் போண்டா 

தேவை:

தேங்காய் துருவல் - 1 கப் 

பச்சரிசி - 1 கப்

மிளகு  - 2 ஸ்பூன் 

உளுந்தம் பருப்பு - அரை கப்

உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப 

செய்முறை :

பச்சரிசி, உளுந்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து, ஊறியதும் நீரை வடித்து, உப்பு சேர்த்து, வடை மாவை விட சிறிது இளக்கமாக அரைக்கவும். மாவில் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மாவை போண்டாக்களாக உருட்டி போடவும். பொன்னிறமாக சிவந்ததும் எடுத்தால், சுவையான தேங்காய் போண்டா தயார்.

ரவை போண்டா 

தேவை:

ரவை - 1 கப்

 உளுந்து மாவு - அரை கப்

புளித்த தயிர் - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - 1 

இஞ்சித் துருவல் - அரை ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

ரவையை வறுத்து, புளித்த தயிரில் உப்பு, உளுந்து மாவு சேர்த்து, ஊறவைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து, வெங்காயம், இஞ்சித் துருவல் கலந்து, பிசைந்து போண்டாக்களாக உருட்டி, வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு, பொரித்து எடுக்கவும். சுவையான, செய்வதற்கு சுலபமான ரவை போண்டா தயார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - மெதுவாகச் சென்றால் பத்து நிமிடங்கள்... வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ?! அது எப்படி?
amazing bonda recipes

வெஜிடபிள் போண்டா

தேவை:

உருளைக்கிழங்கு, கேரட் - தலா 2

பீன்ஸ் - 6

நறுக்கிய வெங்காயம் - 1 

பச்சை பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

இஞ்சி துருவல் - அரை டேபிள் ஸ்பூன் 

கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

கடலை மாவு - 1 கப் 

அரிசி மாவு  - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, மசிக்கவும். கேரட், பீன்ஸ், பட்டாணியை வேகவைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல் இவற்றை போட்டு வதக்கி, வெந்த காய்கறிகளுடன் சேர்க்கவும். உப்பு, கறிவேப்பிலை இவற்றையும் சேர்த்து, நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். கடலை மாவையும், அரிசி மாவையும் கலந்து,  தோசை மாவு பதத்தில் கரைத்து, காய்கறி உருண்டைகளை அதில் தோய்த்து எடுத்து, வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சத்தான வெஜிடபிள் போண்டா ரெடி‌.

ஜவ்வரிசி போண்டா

தேவை: 

ஜவ்வரிசி – அரை கப், 

அரிசி மாவு – 1 கப், 

மிளகுத்தூள் – 2 ஸ்பூன், 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

இதையும் படியுங்கள்:
வித்தியாசமான சுவையில் நான்கு பர்பி வகைகள்!
amazing bonda recipes

செய்முறை: 

ஜவ்வரிசியை 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, நைசாக கெட்டியாக அரைக்கவும். (ஜவ்வரிசி முழுதாக இருந்தால் வெடித்து எண்ணெய் சிதற வாய்ப்பு உண்டு). அதில் அரிசி மாவு, உப்பு, மிளகுத்தூள் கலந்து பிசைந்து, உருண்டைகளாக உருட்டி, வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மொறு மொறு ஜவ்வரிசி போண்டா ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com