
கோதுமை ரவை பர்பி
தேவை:
பசும் பால் - அரை கப்
கோதுமை ரவை - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - அரை ஸ்பூன்
நெய் - ஒரு கப்
முந்திரி - 6
சர்க்கரை - 2 கப்
செய்முறை:
கோதுமை ரவை, நெய், இரண்டு ஸ்பூன் பால் மூன்றையும் கலந்து பிசையவும். கால் மணி நேரம் கழித்து, வாணலியில் அரை கப் நெய் விட்டு, பிசைந்த ரவையை சிவக்க வறுக்கவும். பின்னர் சர்க்கரையை முதிர் பாகாக காய்ச்சி, அதில் வறுத்த ரவை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி, பர்பி பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி, ஆறியதும் வில்லைகள் போடவும்.
பப்பாளி பர்பி
தேவை:
பப்பாளி பழம்– 1
பால் – 2 கப்,
சர்க்கரை – அரை கப், ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை,
வறுத்த முந்திரி - 6,
நெய் – கால் கப்.
செய்முறை:
பப்பாளிப் பழத்தை தோல், விதை நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, பழத் துண்டுகளை வதக்கி அரைக்கவும். பாலை சுண்டக் காய்ச்சி கோவா செய்து, பப்பாளிப் பழ விழுதுடன் கலந்து பிசையவும். வாணலியில் மீதியுள்ள நெய்யை விட்டு, கலவையைப் போட்டுக் கிளறவும். பின்னர் இதில் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.. சர்க்கரையை பாகு காய்ச்சி, அதில் கலவையைக் கொட்டிக் கிளறி, பர்பி பதம் வந்ததும், இறக்கி தட்டில் கொட்டி பரப்பி, ஆறியதும் வில்லைகள் போடவும்.
பாதாம் பர்பி
தேவை:
பாதாம் – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
நெய் – 2 டீஸ்பூன்,
செய்முறை:
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறவைத்து, தோல் நீக்கி, நீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். 200 கிராம் சர்க்கரையை முதிர் பாகாக காய்ச்சி, அரைத்த பாதாம் விழுதை நெய் விட்டுக் கிளறவும். பர்பி பதம் வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி, ஆறியதும் வில்லைகள் போடவும்.
கேரட் பர்பி
கேரட் துருவல் – 1 கப்
சர்க்கரை - 2 கப்
முந்திரிப் பருப்பு – 6
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையில் சிறிது நீர் ஊற்றி, கம்பி பாகு காய்ச்சவும். அதனுடன் கேரட் துருவல் சேர்த்து, நெய் விட்டுக்கிளறி சுருண்டு வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, வில்லைகள் போடவும். சுவையான, சத்தான, வண்ண மயமான கேரட் பர்பி தயார்.