நாவூறும் நால்வகை அல்வா: ஆப்பிள், பீட்ரூட், மிக்ஸட் ஃப்ரூட்ஸ் அல்வா செய்வது எப்படி?

healthy-halwa-recipes
healthy-halwa-recipes
Updated on

ஆப்பிள் அல்வா

தேவை:

ஆப்பிள் - 3

பால் - 1 கப்

சர்க்கரை - 50 கிராம்

நெய் - 4 tsp

ஏலக்காய் - 3

கேசரி பொடி - ஒரு சிட்டிகை

பாதாம் ,

முந்திரி - 5

செய்முறை:

ஆப்பிளை சுத்தம் செய்து தோல்களை நீக்கி மைய அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி காய விடவும். காய்ந்ததும் ஆப்பிள் சேர்த்து நீர் இறுகும் வரை பிரட்டவும். அடுத்ததாக பால் ஊற்றி 3 நிமிடங்கள் கிளரவும். அதோடு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி இரண்டையும் சேர்த்துக்கொள்ளவும். பின் தட்டு போட்டு மூடி குறைந்த தீயில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் கேசரி பொடி சேர்க்கவும். மீண்டும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின் முந்திரி, பாதாமை தனியாக தேவைக்கேற்ப நெய் ஊற்றி பொறித்து எடுத்துக்கொள்ளவும். அதை கிளறி வைத்திருக்கும் அல்வாவில் மேலே மழை சாரல் போல் தூவவும். இதோ சுவையான ஆப்பிள் அல்வா தயார்.

பீட்ரூட் அல்வா

தேவை:

பீட்ரூட் - கால் கிலோ

பால் - 1 கப்

சர்க்கரை - கால் கிலோ

நெய் - 5 டீஸ்பூன்

ஏலக்காய் - 4 (பொடியாக்கியது)

உலர் திராட்சை - 10

முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு, பொடியாகத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு நெய்யை விட்டு, அதில் உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்பை சிவக்க வறுத்தெடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

அதே வாணலியில் மீண்டும் சிறிதளவு நெய் விட்டு, அத்துடன் பீட்ரூட் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பீட்ரூட் ஈரப்பசையில்லாமல் நன்கு வதங்கியவுடன் பாலைச் சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து பால் சுண்டி பீட்ரூட் கலவையுடன் நன்றாகச் சேர்ந்தப் பின் சர்க்கரையைச் சேர்க்கவும்.

அல்வா நன்கு கெட்டியாகும் வரைக் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா கெட்டியானவுடன் மீதமுள்ள நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திhp, திராட்சை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி, நெய் தடவிய கிண்ணத்தில் போட்டு வைக்கவும். பீட்ரூட் அல்வா ரெடி.

இதையும் படியுங்கள்:
நேபாளி ச்சுற்பி: இமயமலை மக்கள் ஏன் இந்த சீஸை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
healthy-halwa-recipes

மிக்ஸட் ஃப்ரூட்ஸ் அல்வா

தேவை:

பப்பாளி, வாழை, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்த பழக்கூழ் – 2 கப்,

வெண்ணெய் – 3 டீஸ்பூன்,

சர்க்கரை – 2 கப், பல் பவுடர் கால் கப்,

குளூக்கோஸ் பவுடர் – 3 டீஸ்பூன்,

ஃப்ரூட் எசன்ஸ் – அரை டீஸ்பூன்,

பாதம், முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன்,

ஆரஞ்சு கலர் – அரை டீஸ்பூன்.

செய்முறை:

அடிகனமான பத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியாக வந்ததும் குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர், பாதம், முந்திரி துண்டுகள், வெண்ணெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். நன்றாக கெட்டியானதும் எசன்ஸ், கலர் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.

பருத்திப்பால் அல்வா

தேவை:

பருத்தி விதை - 100 கிராம்

வெல்லம் - 75 கிராம்

சுக்கு - ஒரு துண்டு

மில்க்மெய்ட் - அரை கப்

கோவா - 100 கிராம்

நெய் - தேவையான அளவ

இதையும் படியுங்கள்:
டூ-இன்-ஒன் இனிப்பு ரெசிபிகள்: தக்காளி ஜாம் & டிராகன் ஃப்ரூட் அல்வா!
healthy-halwa-recipes

செய்முறை:

பருத்தி விதையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணிநேரம் ஊறவைக்கவும். வெல்லத்தை துருவி வைக்கவும். சுக்கை பொடியாக்கவும்.

ஊறிய விதையை அலசி க்ரைண்டரில் போட்டு அரைத்து மெல்லிய துணியில் வடிகட்டி பால் எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் பருத்திப் பாலை ஊற்றி மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மடங்காக குறுகும் அளவிற்கு கொதிக்கவிடவும்.

பருத்தி பால் கொதித்ததும் கோவா சேர்க்கவும். அதன் பின்னர் பாலுடன் மில்க் மெய்ட் சேர்த்து கலந்து விடவும்.

பிறகு பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து வரும் வரை சேர்த்து கிண்டி விட்டு சுக்கு பொடி போட்டு கிளறிவிடவும்.

கலவை கெட்டியானதும் நெய் ஊற்றி இறக்கவும். முந்திரி துருவி சேர்த்தால் பருத்திப்பால் அல்வா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com