டூ-இன்-ஒன் இனிப்பு ரெசிபிகள்: தக்காளி ஜாம் & டிராகன் ஃப்ரூட் அல்வா!

வீட்டிலேயே ரொம்ப ஈஸியா தக்காளி ஜாம் & டிராகன் ஃப்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
Dragon Fruit Halwa and Tomato Jam
Dragon Fruit Halwa and Tomato JamAI Image
Updated on

இன்று இரண்டு இனிப்பு ரெசிபிகளை பார்க்கலாம். ஒன்று தக்காளி ஜாம், மற்றொன்று டிராகன் ஃப்ரூட் அல்வா. இந்த இரண்டு ரெசிபிகளையும் செய்வது மிகவும் சுலபம். ஆனால் சுவையோ அலாதி. வாங்க இன்று இந்த இரண்டு ரெசிபிகளையும் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இனிப்பு புளிப்பு சுவையில் தக்காளி ஜாம்..

தேவையான பொருட்கள்:

தக்காளி - 250 கிராம்

பேரீச்சம் பழம் - 10

சர்க்கரை - 250 கிராம்

முந்திரி - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சம் பழத்தை கொட்டையை நீக்கி விட்டு தனியாக எடுத்து வைக்கவும்.

தக்காளியை சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து தோலை எடுத்து விட்டு மிக்சியில் போட்டு, அதனுடன் பேரீச்சம் பழத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
இனிப்பு விரும்பிகளுக்கு பன்னீர் ஜாம் மற்றும் மில்க் பரோட்டா!
Dragon Fruit Halwa and Tomato Jam

கடாயில் நெய் சேர்த்து சூடானதும் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக நிறம் மாறி பச்சை வாசனை போனவுடன், சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

இடையில் நெய் சிறிது சிறிதாக சேர்த்து கொள்ளவும்.

தக்காளி ஜாம் திக்கான பதம் வந்து ஓரங்களில் நெய் பிரிந்து வரும்போது வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஏலக்காய் சிறிது சேர்த்து கொள்ளலாம்.

இப்போது சூப்பரான புளிப்பு இனிப்பு சுவையில் கலக்கலான தக்காளி ஜாம் ரெடி.

டிராகன் ஃப்ரூட் அல்வா

தேவையான பொருட்கள்:

டிராகன் ஃப்ரூட் - 2 (500 கிராம்) உள்ளே சிவப்பு கலர் சதை இருக்கும் பழம்

சர்க்கரை - 250 கிராம்

நெய் - 100 கிராம்

முந்திரி - 10 கிராம்

பாதாம் - 10 கிராம்

சோள மாவு - 50 கிராம்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

முந்திரி, பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

டிராகன் ஃப்ரூட் தோலை நீக்கி சதைப்பகுதியை துண்டுகளாக நறுக்கி அதில் மிக்சியில் போட்டு நைசாக அரைக்கக் கூடாது. சிறிது பல்ப் போல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த டிராகன் ஃப்ரூட் ஜூஸ் உடன் சோள மாவு சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.

பின்னர் அதே நெய்யில் அரைத்த டிராகன் ஃப்ரூட் கலவையை சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

சோள மாவு சேர்த்துள்ளதால் கைவிடாமல் கிளற வேண்டும். இல்லையென்றால் அடிபிடித்துவிடும்.

சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.

இடையிடையே சிறிது சிறிதாக நெய் சேர்த்து கொண்டே வரவும். நெய் சேர்க்கும் போது கூடுதல் சுவை கிடைக்கும்.

நெய் பிரிந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

கடைசியாக வறுத்து வைத்த முந்திரி, பாதாமை சேர்த்து கிளறி இறக்கவும்.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு ஸ்வீட்! நாவூறும் 'நுங்கு அல்வா' செய்வது எப்படி?
Dragon Fruit Halwa and Tomato Jam

சூப்பரான டிராகன் ஃப்ரூட் அல்வா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com