காய்கறிகளில் தயாரிக்கக்கூடிய 5 அசத்தலான இந்திய இனிப்புகள்!

Indian Sweets
Indian Sweets
Published on

இந்திய இனிப்புகள் என்றாலே பொதுவாக மாவு, சர்க்கரை, பால் பொருட்கள் அல்லது பருப்புகளால் செய்யப்பட்டவை என்றுதான் நினைப்போம். ஆனால், நம் இந்திய சமையல் கலை மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. சில அற்புதமான இனிப்புகள், நாம் சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்தும் காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். வழக்கமான இனிப்பு வகைகளுக்குப் பதிலாக, இந்தத் தனித்துவமான இந்தியக் காய்கறி இனிப்புகளை ஒருமுறை சுவைத்துப் பாருங்கள்.

1. கேரட் அல்வ: இது வட இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு. துருவிய கேரட்டை நெய், பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்துச் சமைத்துச் செய்யப்படுகிறது. கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது கண்களுக்கும், சருமத்திற்கும் நல்லது. பண்டிகைக் காலங்களில் இது ஒரு தவிர்க்க முடியாத இனிப்பு.

2. சுரைக்காய் அல்வா: சுரைக்காய் பொதுவாகக் குழம்பு, கூட்டு போன்றவற்றுக்குத்தான் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த ஆரோக்கியமான காய்கறியைக் கொண்டு தயாரிக்கப்படும் அல்வா மிகவும் சுவையாக இருக்கும். துருவிய சுரைக்காயை நெய், பால், சர்க்கரை மற்றும் நறுமணப் பொருட்களுடன் சமைத்து, அதன் மேல் நறுக்கிய நட்ஸ் சேர்த்துப் பரிமாறுவார்கள். இது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

3. பீட்ரூட் பர்பி: பீட்ரூட் அதன் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கும், இனிப்புச் சுவைக்கும் பெயர் பெற்றது. இந்தப் பீட்ரூட்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் பர்பி, பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பீட்ரூட்டை வேகவைத்து மசித்து, பால் கோவா, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்துப் பர்பி போலச் செய்வார்கள். பீட்ரூட்டில் இரும்புச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.

4. பூசணிக்காய் அல்வா: மஞ்சள் பூசணிக்காய் கொண்டு செய்யப்படும் அல்வா, இனிப்பு பிரியர்களுக்கு ஒரு அற்புதமான தேர்வு. பூசணிக்காயைத் துருவி, சர்க்கரை, நெய், பால், ஏலக்காய் மற்றும் நட்ஸ் சேர்த்துச் சமைக்கப்படும் இந்த அல்வா, தனித்துவமான சுவை கொண்டது. இது எளிதாகச் செரிமானமாகக்கூடியது என்பதால், அனைவராலும் விரும்பப்படும்.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான பூசணி கலவைக்கூட்டு - முள்ளங்கி சட்னி செய்யலாமா?
Indian Sweets

5. சிறிய பூசணிக்காய் இனிப்பு: சிறிய, வட்டமான பூசணிக்காயைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு தனித்துவமான இனிப்பு இது. இதைச் சர்க்கரைப் பாகில் ஊறவைத்துச் செய்யப்படுகிறது. இது ஒருவகையான இனிப்பு ஊறுகாய் போன்றது. சில இடங்களில் இது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்தக் காய்கறி அடிப்படையிலான இனிப்புகள், வழக்கமான இனிப்புகளுக்கு ஒரு சுவையான மாற்றாகும். இவை காய்கறிகளின் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளதால், குற்ற உணர்ச்சியில்லாமல் சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com