

ஆரோக்கியம் தரும் புதினா மற்றும் மாதுளை லஸ்ஸி ரெசிபிகள்
தேவை:
புதினா இலைகள் - 1 கைப்பிடி
பிஞ்சு வெள்ளரி -2
கெட்டித் தயிர் -2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை:
கெட்டித் தயிருடன் உப்பு வெள்ளரி சேர்த்து நுரைக்க மிக்ஸியில் அடிக்கவும். பின்னர் புதினா, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அடித்து பரிமாறும் கிளாஸில் ஊற்றி மேலாக புதினா, மல்லி அலங்கரித்து பரிமாற அல்டிமேட் சுவையில் கம கம மணத்துடன் கூடிய கார் புதினா வெள்ளரி லஸ்ஸி ரெடி.
மாதுளை லஸ்ஸி
தேவை:
கெட்டித் தயிர் – ஒரு கப்
மாதுளை முத்துக்கள் – ஒரு கப்
சர்க்கரை – 4 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – 4
செய்முறை:
மாதுளை முத்துக்களை மிக்ஸியில் போட்டு அரைத்து தயிருடன் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர மீண்டும் மிக்ஸியில் அடித்து அடித்து, குளிர வைத்து பருகவும். சூப்பர் சுவையில் மாதுளை லஸ்ஸி ரெடி.
குழந்தைகள் விரும்பும் சாக்லேட் மற்றும் ரோஸ் லஸ்ஸி ரெசிபிகள்
தேவை:
தேங்காய்ப் பால் - ஒரு கப்
கெட்டித் தயிர் - இரண்டு கப்
கோகோ பவுடர் - 2 ஸ்பூன் அல்லது சாக்லேட் பார் 1
சர்க்கரை - 10 ஸ்பூன்
முதலில் தேங்காய் பால் மற்றும் கெட்டித் தயிரை மிக்ஸியில் சேர்த்து நுரைக்க 2, 3 முறை அடிக்கவும். பின்னர், அதனுடன் கோகோ பவுடர் அல்லது சாக்லேட் பார் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடிக்கவும். ஃபிரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சாக்லெட் லஸ்ஸி ரெடி.
ரோஸ் லஸ்ஸி:
தேவை:
கெட்டித் தயிர் - ஒரு கப்
ரோஸ் எசென்ஸ் - 2 சொட்டு அல்லது பன்னீர் ரோஜா இதழ்கள் 6
சர்க்கரை - 6 டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் - 2
செய்முறை:
கெட்டித்தயிர், ரோஸ் எசென்ஸ் அல்லது பன்னீர் ரோஜா இதழ்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, நன்கு நுரை பொங்க அடித்து, கிளாஸில் ஊற்றி, ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும். சூப்பரான ரோஸ் லஸ்ஸி ரெடி. ரோஸ் எசென்ஸுக்கு பதிலாக பன்னீர் ரோஜா இதழ்கள் கிடைத்தால் போடலாம்.
விருந்தினர்களை அசத்த மூவர்ண லஸ்ஸி ரெசிபிகள்
தேவை:
கேசர் சிரப் (ஆரஞ்ச் நிறத்திற்காக) - இரண்டு ஸ்பூன்
தயிர் - 3 கப் (வெள்ளை நிறத்திற்கு)
குஸ் சிரப்- இரண்டு ஸ்பூன் (பச்சை நிறத்திற்கு)
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
சர்க்கரை - 3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் தயிருடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். பின்னர் தனித்தனியாக 3 பாத்திரத்தில் தயிரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேசிய கொடியின் காவி நிறத்தைப் பெறுவதற்கு கேசர் சிரப்பை தயிருடன் கலக்கிக்கொள்ளவும். இதே போன்று பச்சை நிறத்திற்காக குஸ் சிரப்பை ஊற்றி லஸ்ஸியை கலக்கிக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து முதலில் ஒரு கிளாஸில் பச்சை நிற லெஸ்ஸியை ஊற்றவேண்டும். பின்னர் எந்த கலரும் கலக்காத வெள்ளை நிற லெஸ்ஸியையும், கடைசியில் காவி நிற லெஸ்ஸியை ஊற்ற வேண்டும். இப்போது மூவர்ண கொடி போன்ற லெஸ்ஸி உங்களுக்கு கிடைத்துவிடும். இறுதியில் லஸ்ஸியின் மேல் பிஸ்தா பருப்பை அலங்கரித்து பரிமாறலாம்.
இந்த எளிய கோடைகால பானங்களை உங்கள் வீட்டிலேயே தயாரிப்பதன் மூலம், கடைகளில் வாங்கும் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து, உங்கள் குடும்பத்தினருக்கு ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய சுவையான குளுமையை உங்களால் உடனடியாக வழங்க முடியும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்