அயோத்திக்கு சென்றால் இந்த 6 உணவுகளை மட்டும் சுவைக்காமல் திரும்பாதீர்கள்!

6 Best dishes of Ayodhya.
6 Best dishes of Ayodhya.

ஆன்மீகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் போன அயோத்தி இப்போது அனைவரும் செல்ல விரும்பும் ஒரு தலமாக கருதப்படுகிறது. அயோத்திக்கு சென்று ராமரை தரிசிக்க வேண்டுமென்றால் நாம் முதலில் அதற்கு தெம்பாக இருக்க வேண்டும். தெம்பாக இருப்பதற்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். அந்தவகையில் அயோத்தி சென்றால் இந்த சுவையான உணவுகளை சாப்பிட்டு பாருங்கள்.

1. லிட்டி சோகா:   

லிட்டி சோகா
லிட்டி சோகா

லிட்டி என்பது மசாலாப் பொருட்களால் வறுக்கப்பட்ட மாவு உருண்டையாகும். அதேபோல் சோகா என்பது கத்திரிக்காய், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பிசைந்து வறுத்து தயாரிக்கப்படும் ஒரு உணவு. இந்த லிட்டி சோகா உணவு ருசியையும் மன நிறைவையும் அள்ளித் தரும்.

2. கச்சோரி:

கச்சோரி
கச்சோரி

கச்சோரி என்பது பருப்பு, பட்டாணி மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையில் செய்யப்படும் ஒரு பேஸ்டரி ஆகும். இதனுடன் சப்ஜி எனப்படும் காரமான உருளைக்கிழங்கு கறியும் பரிமாறப்படும். இது அயோத்தியின் சாலை உணவுக்குப் பெயர் போனது.

3. ராம் லடூ:

ராம் லடூ
ராம் லடூ

இது ஒரு பருப்பு கலவையால் செய்யப்படும் ஒரு உருண்டை வகை உணவு. இதனுடன் பச்சை சட்னி மற்றும் துருவிய முள்ளங்கியும் சேர்த்து பரிமாறுவார்கள். இதன் மொறுமொறுப்பான வெளிப்புறமும் மென்மையான உட்புறமும் பலர் விரும்பி சாப்பிட காரணமாகின்றன. இதுவும் சாலை உணவுகளில் பிரபலமானது.

4. பாடி:

பாடி
பாடி

இதுவும் லிட்டி சோகா போலவே கோதுமை மற்றும் நெய்யால் செய்யப்படும் ஒரு ரொட்டியாகும். சோகாவை போல் பிசைந்த காய்கறிகளின் காரமான கலவையுடன் சேர்த்து கொடுக்கப்படும்.

5. தண்டை:

தண்டை
தண்டை

தண்டை என்பது அயோத்தியின் புகழ்பெற்ற பானமாகும். பாதாம், பெருஞ்சீரகம், ரோஜா இதழ்கள், ஏலக்காய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு  பானம். இது குடித்தப்பிறது மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான இந்த பானம் ஹோலி போன்ற பண்டிகைகளில் அதிகம் செய்வார்கள்.

6. பேடா:

பேடா
பேடா

பேடா என்பது பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு மிட்டாயாகும். மேலும் அதன் மேல் முந்திரி, பாதம் போன்றவை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்த இனிப்பு மிட்டாய் பண்டிகை நாட்களில் அதிகம் செய்யப்படும்.

இது போக அயோத்தியின் குலாப் ஜாமுனும் மிக சுவையாக இருக்கும். ஆகையால் இவையனைத்தையும் அயோத்திற்கு செல்லும்போது சாப்பிட்டு மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com