
நம் இந்திய நாட்டு பாரம்பரிய உணவு சமைக்கும் பழக்கத்தில் பயன்படுத்த கூடிய ஒரு பாத்திரம் இரும்பு கடாய். இதில் சமைப்பது எளிது என்பதால் அனைவரும் இதில் சமைக்கிறார்கள்.
இந்த கடாயில் காய்கறிகள் பருப்பு வகைகள் மற்றும் இதர உணவு வகைகள் கூட வைக்கிறார்கள்.
சாப்பிடுபவர்கள் அந்த பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்யும்போது கூப்பிடுங்களே காத தூரம் ஓடி விடுவார்கள். அவ்வளவு கஷ்டம். கஷ்டமப்பா கஷ்டம் என்று குடும்ப பெண்கள் புலம்புவார்கள். இதோ வழி தெரிந்துவிட்டது வாருங்கள் கடாயை எப்படி சுத்தப்படுத்தி வெள்ளி நிறமாய் மாற்றுவது?
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதில் வரும் தயாரிப்புகளை வாங்கி சுத்தப்படுத்துவதைவிட இது அதிக செலவில்லாத வழி இது செய்துதான் பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:
அலும் பவுடர்
தேவையான அளவு தண்ணீர்
டிடர்ஜென்ட் பவுடர்
கடுகு எண்ணெய்
முதலில் இரும்பு கடாயை ஸ்டவ்வில் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றவேண்டும். அது சூடான பின்பு ஒரு ஸ்பூன் அளவிற்கு அலும் பவுடர் போட்டு கொதிக்கவிட்டு பின்பு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு டிடர்ஜென்ட் பவுடரை கலக்கவேண்டும். அது மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கொதிக்கவேண்டும்.
இந்த கலவை கடாயின் எல்லா பக்கங்களிலும் பரவுமாறு பார்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்கு பின்பு ஸ்டவ் அணைக்க வேண்டும்.
பின்பு அந்த கலவை நீரை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றிவிட்டு அதனை இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு கடாயை தேய்த்தால் பளிச்சென ஆகிவிடும்.
பின்பு ஒரு சிறிய துணியால் கடாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் கடுகு எண்ணெய் தடவி வைத்தால், எதிர்காலத்தில் மீண்டும் அழுக்கு அல்லது துரு சேராமல் தடுத்துவிடும்.
இப்படி செய்வதால் என்ன பயன்?
1. உங்கள் இரும்பு கடாய் பளிச்சென பார்வையாக இருக்கும்.
2. இதன் பிறகு கடாய் பயன்படுத்திவிட்டு கழுவ எளிதாக அமைந்துவிடும்.
3. இதன் வாயிலாக கருப்பு மற்றும் அழுக்கு துகள்கள் அப்புறப்படுத்தப்படும்.
4. இது எளிய வீட்டுமுறை பராமரிப்பு செலவில்லா பராமரிப்பும் கூட.
”எங்கே ஸார் கிளம்பிட்டீங்க… வீட்டுல போய் கடாயை சுத்தப்படுத்தி மனைவிகிட்ட நல்ல பேர் வாங்கத்தானே! ஜமாய்ங்க. தாய்க்கு பின் தாரம்தானே!