
இந்தியாவின் பாரம்பரியம் பண்டிகைகளும், திருவிழாக்களும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சுவை பிரதானமாக இருக்கிறது. தொன்மையாக தயாரிக்கப் படும் அல்வா, லட்டு, அதிரசம் போன்றவை, இன்று ரிச்சாக அவரவர் ரசனைக்கும், சுவைக்கும் ஏற்ப விதவிதமான அலங்காரங்களுடன், அதிக விலைகளில் கிடைக்கின்றன.
நம் நாட்டில் குறிப்பாக காஜு கத்லி. மற்ற இனிப்புகளுடன் ஒப்பிடும்போது அதிக விலையில் விற்பனை செய்யப் படுகிறது. பாதாம், கேசர் ஸ்வீட்கள் விலை அதிகம். வட நாட்டில் ஃபேமஸ் ஆன சில ஸ்வீட்களாக குலோப் ஜாமூன், ரசமலாய், ஜிலேபி, குஜியா, சந்தேஷ், பேடா, பர்ஃபி, சிக்கி, சோகன் அல்வா போன்றவை ஸ்பெஷலாக சொல்லலாம்.
நம் பக்கம் ஸ்வீட்களில் முதன்மையாக ஜிலேபி அனைவராலும் விரும்பப்படுகிறது. ஜீராவுடன் பளபளப்பாக பார்க்கவும், சுவைக்கவும் நன்றாக இருக்கும்.
ஸ்வீட்களுடன் சம்பந்தப்பட்ட ஊர்களாக ஆக்ரா-பேடா, மதுரா-பேடா, மைசூர்-மைசூர் பாகு, வங்காளம் -ரசகுல்லா, க்ஷீவில்லிபுத்தூர்-பால்கோவா, திருநெல்வேலி -அல்வா, திருவாரூர் -அசோகா என ஸ்பெஷல் ஸ்வீட்கள் ருசியாக இருக்கும்.
இந்தியாவின் விலை உயர்ந்த ஸ்வீட்ஸ்; எக்சோடிகா, தங்ககாரி, பேசன் லாடு, கோகினூர் தங்க அல்வா, தங்க இலை உலர் பழ இனிப்பு, சுவர்ண மித்தாய் போன்றவை.
இவை ஒரு கிலோ 9000 ரூபாய் முதல் 50,000/ரூபாய் வரை விற்கப்படுகிறது. லக்னோவில் ஒரு கடையில் விற்கப்படும் சக்காபான் (chahappan) என்ற ஸ்வீட்டின்விலை 50,000/ரூபாய்.
எக்சோடிகா என்ற ஸ்வீட் டில் (Exotica) சேர்க்கப்படும் பொருட்கள் வெவ்வேறு நாடுகளில், இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இரானிலிருந்து ம்மரா பாதாம் பருப்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து பிஸ்டாசியோஸ், தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகடாமியா, காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ, கின்னாரிலிருந்து பைன் கொட்டைகள் என இவைகள் கலந்து தயாரிக்கப்படும் இந்த ஸ்வீட் டின் விலைதான் கிலோ50,000/ ரூபாய்.
உலகின் மிக உயர்ந்த ஸ்வீட் டின் ஆரம்பமே 25,000/. Frozen Haitee சாக்லேட் ஐஸ்கிரீம் சண்டே என்ற ஸ்வீட்டின் விலை 25,000/டாலர். 23கேரட், 5. கிராம் தங்கத்தில் உண்ணக்கூடிய அளவில் சேர்க்கப்பட்டு விற்பனையாகிறது. தங்க ஸ்பூன், ஒரு கேரட் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும் ஐஸ்கிரீம் இது. உண்ணக்கூடிய தங்கத் தகடுகளால் மூடப்பட்ட கோப்பையில் தருவர்.
இது விலை மற்றும் தரத்திற்காக. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மற்றொரு சுவீட் கோல்டன் கன்னோலி, விலை 26010டாலர். விலையுயர்ந்த டார்க் சாக்லேட் பேஸ்ட் கொண்டு தயாரிக்கப்பட்டது. தட்டையான ரிக்கோட்டா பீஸ், மிட்டாய், எலுமிச்சை சாக்லேட், மற்றும் எலுமிச்சை தோல் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.
செழுமையான தங்க இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவைபோல பல விலை உயர்ந்த இனிப்புகள் உள்ளன. பெரும் பணக்காரர்களால். மட்டுமே வாங்கி சுவைக்கப்படும் இனிப்புகள் நம் இந்தியாவில் கிடைக்கின்றன.
இவை அனைத்தும் என் வடநாட்டு தோழி ஆச்சரியப்பட்டு என்னிடம் பகிர்ந்ததை எழுதியுள்ளேன்.