
நிலக்கடலை லட்டு
தேவை:
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை - 1 கப் வெல்லத்தூள் - அரை கப், ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
நிலக்கடலை வெல்லத்தூள் இரண்டையும் போட்டு மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து அந்தக் கலவையை சிறு சிறு லட்டுகளாக பிடித்து வைக்கவும். சுவையான, சத்தான, எளிதில் செய்யக்கூடிய நிலக்கடலை லட்டு (Healthy Peanut snacks) தயார்.
******
நிலக்கடலை பக்கோடா
தேவை:
வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை – ஒரு கப்,
கடலை மாவு, அரிசி மாவு – தலா அரைக்கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
செய்முறை:
இரண்டு மாவுகளையும், கடலை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிறகு காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான, மாலை நேரத்திற்கு ஏறற நிலக்கடலை பக்கோடா தயார்.
*******
நிலக்கடலை கூட்டு
தேவை:
துவரம் பருப்பு – அரை கப்
புளி - கோலி குண்டு அளவு அளவு – 1
கடுகு - – அரை ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
வறுத்த கடலை - கால் கப்
மிளகு சீரகம் - தலா ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பை வேகவைக்கவும். மிளகு, சீரகம், தேங்காய்த் துருவலை அரைக்கவும். அரைத்த விழுதை வெந்த பருப்பில் சேர்க்கவும். உப்பு, புளிக் கரைசல் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். ஒரு கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து, கடலையை வறுத்து கூட்டில் கொட்டவும். சூடானதும் இறக்கி வைக்கவும். சூப்பர் சுவையில் நிலக்கடலை கூட்டு தயார்.
******
நிலக்கடலை சுண்டல்
தேவை:
தோல் நீக்கிய நிலக்கடலை – ஒரு கப்
தேங்காய் துருவல் –2 ஸ்பூன்,
கடுகு வரமிளகாய் - தாளிக்க உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தோல் நீக்கிய நிலக்கடலையை சிறிது நீர் விட்டு வேகவைக்கவும். நீர் நிறைய சேர்த்தால் குழைந்துவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய் தாளித்து வெந்த நிலக்கடலையை கொட்டி உப்பு சேர்த்து தேங்காய் தருவல் தூவி இறக்கி வைக்கவும். சுவையான சத்தான நிலக்கடலை சுண்டல் தயார்.