
எள் வேர்க்கடலை பச்சை பீன்ஸ் பொரியல்
தேவையானவை;
பச்சை பீன்ஸ் _ 2 கப்(1அங்குல அளவில் நறுக்கியது)
உப்பு _சுவைக்கேற்ப
மிளகாய்தூள், கடுகு, சீரகம் தலா _ ½ தேக்கரண்டி
எண்ணெய் _1 தேக்கரண்டி
தண்ணீர் _2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் _ 1
மசாலாப் பொடிக்கு
எள் _ 1 தேக்கரண்டி
பச்சை வேர்க்கடலை _2 தேக்கரண்டி
செய்முறை;
பிரஷர் குக்கரில், நறுக்கிய பீன்ஸ், உப்பு, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 1 விசில் வரும்வரை சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன், குளிர்ந்த நீரின் கீழ் வைத்து அழுத்தத்தை உடனடியாக விடுவித்து, தனியாக வைக்கவும். ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து, எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக நறுமணமாக மாறும் வரை வறுக்கவும்.
முழுமையாக ஆறியதும், மிக்ஸியில் கரடுமுரடான பொடியாக அரைக்கவும். அதே கடாயில், ஒரு டீஸ்பூன் எண்ணெயை மிதமான தீயில் வைத்து, கடுகு, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். கடுகு வெடித்தவுடன், வேகவைத்த பீன்ஸைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
மிளகாய் தூள் மற்றும் தயாரிக்கப்பட்ட எள் வேர்க்கடலை மசாலா கலவையைச் சேர்த்து விரைவாகக் கிளறவும். பீன்ஸ் பொரியல் ஏற்கனவே உப்பு சேர்த்து சமைக்கப் பட்டதால், தேவையானால் உப்பு சேர்க்கவும். முடிந்ததும், தீயை அணைக்கவும். ஆரோக்கியமான இந்த பொரியல் மதிய உணவிற்கு சிறந்ததாகும்.
முருங்கைக்காய் பொரியல்
தேவையானவை;
முற்றாத பெரிய முருங்கைக்காய் – இரண்டு
தக்காளி -1 பெரியது
வெங்காயம் – 1 பெரியது
கடுகு,உளுத்தம் பருப்பு தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல் -4
மல்லி, கருவேப்பிலை -சிறிது
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு.
செய்முறை;
மிள்காய்வற்றல், சீரகம் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும், குக்கர் பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, முருங்கைக்காய் சேர்த்து, பிரட்டவும்,பொடித்த சீரகம், வற்றலை சேர்த்து. ஒரு சேர முருங்கைக்காயை பிரட்டி விடவும். பின்பு வதக்கிய முருங்கையுடன் தேங்காய் துருவல்,தக்காளி,உப்பு சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்க்கவும். நன்கு பிரட்டி விட்டு குக்கரை மூடி ஒரே விசில் வைத்து இறக்கவும்.
சுவையான முருங்கைக்காய் பொரியல் ரெடி. இதனை ப்ளைன் சாதத்திற்கு சைட் டிஷ்சாக பயன்படுத்தலாம்.
முள்ளங்கி கீரைப் பொரியல்
தேவையானவை;
முள்ளங்கிகீரை _ 1கட்டு
பெரிய வெங்காயம் _ 1(பொடியாக நறுக்கியது)
வற்றல் _ 2
காரட் 1 (நறுக்கியது)
கடுகு _1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு _1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் _2 ஸ்பூன்
எண்ணெய் _ 2 ஸ்பூன்
செய்முறை;
கீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். கீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விடவும் அதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் வற்றல் மிளகாயை உடைத்து சேர்க்கவும். பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின்னர் கீரையையும் காரட் துண்டுகளையும் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி கீரை பச்சை நிறம் மாறாமல் வேகவைக்கவும். வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை கிளறி இறக்கவும். ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிட ஏற்ற பொரியல்.