இனிப்பு, புளிப்பு, காரம்: ஒரே கொய்யாவில் அசத்தலான 3 சைடு டிஷ்!

Amazing 3 side dishes
Amazing 3 side dishes
Updated on

கொய்யாக்காய் ஊறுகாய்

தேவை: 

கொய்யாக்காய் (பெரியது) - 2, 

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 

கடுகு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், 

மஞ்சள்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், லெமன் சால்ட் (நாட்டுமருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - சிறிதளவு.

செய்முறை: 

கொய்யாவை வேகவிட்டு, ஈரம் போக துடைத்து... சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, கொய்யா துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, லெமன் சால்ட் சேர்த்துக் கலந்து இறக்கினால், சுவையான, விட்டமின்கள் நிறைந்த கொய்யாக்காய் ஊறுகாய் ரெடி.

கொய்யா ஆப்பிள் ஜாம்

 தேவை:

கொய்யா பழம் - 3

ஆப்பிள் - 1

சர்க்கரை - தேவைக்கேற்ப

எலுமிச்சைசாறு - 5 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
நாவூறும் தக்காளி பொங்கலும், மணக்கும் வரமல்லி துவையலும் - அசத்தலான காம்போ ரெசிபி!
Amazing 3 side dishes

செய்முறை:

முதலில் கொய்யா பழம் மற்றும் ஆப்பிளை தோல் நீக்காமல் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொய்ய பழம் மற்றும் ஆப்பிளை வேகவைக்கவும்.

நன்கு வெந்த பின்பு அதை மசித்து கொள்ளவும். மசித்ததை நன்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் வடிகட்டிய பழசாற்றினை ஊற்றி அதில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.

இளஞ்சிவப்பு நிறம் வரும் வரை கிளறவும். பின் இளஞ்சிவப்பு நிறம் வந்தவுடன் இறக்கி காற்று புகாத சுத்தமான டப்பாவில் ஊற்றி மூடி வைக்கவும். சுவையான கொய்யா ஆப்பிள் ஜாம் ரெடி.

கொய்யா துவையல்

தேவை: 

அதிகம் பழுக்காத கொய்யா துண்டுகள் (தோல், விதை நீக்கியது), பச்சை மிளகாய் – தலா 4

கொத்தமல்லி – சிறிதளவு

எலுமிச்சை – 1, 

தேங்காய்த் துருவல் – கால் கப் 

உப்பு - சிறிதளவு

தாளிக்க: 

எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, பெருங்காயம் – சிறிதளவு, 

வெந்தயம் – கால் டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
ஸ்வீட் கடை ரகசியம் உடைந்தது... கல்யாண வீட்டு 'மூங் தால் அல்வா' இனி உங்கள் வீட்டிலும்!
Amazing 3 side dishes

செய்முறை: 

கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லி, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், கடுகு, பெருங்காயம், வெந்தயம் தாளித்துச் சேர்க்கவேண்டும். கொய்யா துவையல் ரெடி. 

சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம் இருப்பதால், இது சாதத்தில் பிசைந்து சாப்பிட மட்டுமின்றி,  சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும் உகந்தது.

logo
Kalki Online
kalkionline.com