நாவூறும் தக்காளி பொங்கலும், மணக்கும் வரமல்லி துவையலும் - அசத்தலான காம்போ ரெசிபி!

இன்று ருசியான தக்காளி பொங்கல் மற்றும் காரசாரமான மல்லி துவையலை எளிய முறையில் செய்வது எப்படி? என்று பார்க்கலாம் வாங்க...
tomato Pongal and dhaniya thogayal
tomato Pongal and dhaniya thogayal
Updated on

க்காளி பொங்கலும், அதற்கு இணையான காரசாரமான வரமல்லி துவையலும் ஒரு சிறந்த காம்பினேஷன். இன்று இந்த அசத்தான இரண்டு ரெசிபிகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...

தக்காளி பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

சிறுபருப்பு - கால் கப்

நன்றாக பழுத்த தக்காளி - 3

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

ப.மிளகாய் - 2

உப்பு - சுவைக்கு

எண்ணெய் - 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

தாளிக்க;

நெய் - 2 டீஸ்பூன்

இடிச்ச மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

முந்திரி - 10

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

பச்சரிசி, சிறுபருப்பை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊற விடவும். தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
பலகாரங்களுக்கு சுவை சேர்க்கும் சக்க வரட்டி, வாழை இலை துவையல்!
tomato Pongal and dhaniya thogayal

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் 1 டீஸ்பூன், நெய் 1 டீஸ்பூன் சேர்த்து சூடானதும் பெருங்காயம், இஞ்சி, ப.மிளகாயை போட்டு வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், உப்பு போட்டு நன்றாக கிளறவும்.

தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்து பச்சை வாசனை போனவுடன் கழுவி வைத்துள்ள அரிசி, பருப்பு கலவையை போட்டு, அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து நன்றாக மசித்து விட்டுக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து, தக்காளி பொங்கலில் சேர்த்து கிளறினால் சூப்பரான கலர்ஃபுல் தக்காளி பொங்கல் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.

வரமல்லி துவையல்

இந்த துவையல் நன்றாக பசியைத் தூண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த டேஸ்டியான ரெசிபியை செய்வது ரொம்பவே ஈஸி.

தேவையான பொருட்கள்;

தனியா - 4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

புளி - எலுமிச்சை அளவு

பூண்டு - 2 பல்

சின்ன வெங்காயம் - 7

காய்ந்த மிளகாய் - 8

தேங்காய் - 2 பத்தை (துருவியது)

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

எண்ணெய் - 1 டேபிள் டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

தாளிக்க;

எண்ணெய் - 1 குழிக்கரண்டி, கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் - அரை டீஸ்பூன்

செய்முறை;

வெறும் கடாயில் தனியா, கடலைப்பருப்பு, உளுந்து, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். வாசனை வரும் வரை வறுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

கடாயில் எண்ணெய் சேர்த்து புளியை போட்டு வறுக்கவும்.

அடுத்து அதில் பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுத்ததும், கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

மிக்சி ஜாரில் முதலில் வறுத்த பருப்பு வகைகளை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுத்து வதங்கிய பூண்டு, தேங்காய் கலவை சேர்த்து அரைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

இப்போது சூப்பரான வரமல்லி துவையல் ரெடி.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியம் தரும் பிரண்டை: தோசை, துவையல், காரக்குழம்பு, வற்றல் ரெசிபிகள்!
tomato Pongal and dhaniya thogayal

இதனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதாக இருந்தால் ஒருவாரம் வரைக்கும் கெட்டுப்போகாது.

இது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com