ஸ்வீட் கடை ரகசியம் உடைந்தது... கல்யாண வீட்டு 'மூங் தால் அல்வா' இனி உங்கள் வீட்டிலும்!

Moong Dal Halwa
Moong Dal Halwa
Published on

ட மாநிலத் திருமணங்களிலோ அல்லது விசேஷங்களிலோ இந்த நெய் மணக்கும் ‘மூங் தால் அல்வா’ அல்வா இல்லாமல் பந்தி முழுமையடையாது. வாரம் முழுவதும் கடுமையான ஃபிட்னஸ் ரொட்டீன், கட்டுப்பாடான டயட்டைப் பின்பற்றுபவர்களுக்குக் கூட, பண்டிகை நாட்களில் ஒரு அருமையான Cheat Day ட்ரீட்டாக அமையக்கூடியது இந்தப் பாசிப்பருப்பு அல்வா. 

இதில் புரதச்சத்து நிறைந்த பாசிப்பருப்பு சேர்க்கப் பட்டாலும், நெய், சர்க்கரையின் அளவு அதிகம் என்பதால் சுவைக்கு எந்தக் குறைபாடும் இருக்காது. இதைச் செய்வதற்குச் சிறிது பொறுமையும், கைகளுக்கு நல்ல பயிற்சியும் தேவைப்படும். ஆனால், செய்து முடித்த பின் கிடைக்கும் அந்த அற்புதம் சுவை, உங்கள் உழைப்பிற்கு முழுமையான பலனைத்தரும். வாருங்கள், அந்த சுவையான அல்வாவை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • பாசிப்பருப்பு - 1 கப்

  • நெய் - 1 கப் 

  • சர்க்கரை - 1 கப் 

  • தண்ணீர் - 1 கப்

  • பால் - 1 கப்

  • ரவை - 1 டேபிள் ஸ்பூன்

  • கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்

  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

  • ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்

  • முந்திரி, பாதாம், பிஸ்தா - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை!

முதலில் பாசிப்பருப்பை இரண்டு மூன்று முறை நன்றாகக் கழுவி, குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பருப்பு நன்கு ஊறிய பிறகு, தண்ணீரை முழுவதுமாக வடிகட்டிவிட்டு மிக்ஸியில் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல், சற்று கொரகொரப்பான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். நைஸாக அரைத்துவிட்டால் அல்வாவின் சரியான பதம் கிடைக்காது.

ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர், 1 கப் பால் சேர்த்துச் சூடாக்கவும். இதில் சர்க்கரையைச் சேர்த்துக் கொதிக்க விடவும். கம்பி பதம் வரத் தேவையில்லை; சர்க்கரை முழுமையாகக் கரைந்து, லேசாகப் பிசுபிசுப்புத் தன்மை வந்தவுடன் ஏலக்காய் தூள், குங்குமப்பூ கலந்த பாலைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிடலாம். இதைத் தனியாக சூடாகவே மூடிவைக்கவும்.

இதையும் படியுங்கள்:
5 லட்சம் ரூபாயில் ஒரு ஐஸ்கிரீம்!
Moong Dal Halwa

அடுத்ததாக, ஒரு அடிகனமான வாணலி அல்லது நான்-ஸ்டிக் கடாயில் அரை கப் நெய்யைச் சூடாக்கவும். மிதமான தீயில், ஒரு ஸ்பூன் ரவை மற்றும் ஒரு ஸ்பூன் கடலை மாவைச் சேர்த்து லேசாக வறுக்கவும். இது அல்வா கடாயில் ஒட்டாமல் இருக்க உதவும் ஒரு அற்புதமான ஹோட்டல் ரகசியம். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பு விழுதை இதில் சேர்த்துக் கைவிடாமல் கிளறத் தொடங்க வேண்டும்.

ஆரம்பத்தில் பருப்பு நெய்யை முழுவதுமாக உறிஞ்சி, கடாயில் ஒட்டுவது போலக் கட்டியாக மாறும். மிதமான தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சுமார் 15 முதல் 20 நிமிடங்களில், பருப்பு நன்கு வறுபட்டு, உதிரியாக மாறி, பொன்னிறமாகச் சிவந்து வாசம் வரும். பருப்பிலிருந்து நெய் தனியாகப் பிரியும் இந்தத் தருணத்தில், நாம் சூடாக வைத்துள்ள சர்க்கரைப் பால் கலவையைச் சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவேண்டும்.

இதையும் படியுங்கள்:
தேங்காய்ப் பால்: ஆரோக்கியம் தரும் இயற்கை அமிர்தம்!
Moong Dal Halwa

பால் கலவையை ஊற்றியதும் அல்வா வேகமாகத் கெட்டியாகத் தொடங்கும். மீதமுள்ள அரை கப் நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, அல்வா சுருண்டு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். 

கடைசியாக, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவைச் சேர்த்துக்கிளறி இறக்கினால், வீடு மணக்கும் சூடான ‘மூங் தால் அல்வா’ தயார். 

இதைச் சூடாகச் சாப்பிட்டால், ஒவ்வொரு வாய்க்கும் நாவில் அப்படியே கரையும். இந்த வீக்கெண்டில் உங்களின் டயட்டிற்குச் சிறிய ஓய்வு கொடுத்துவிட்டு, இந்த அல்வாவை ருசித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com