சமையலறையில் ஜொலிக்க... 20+ அசத்தல் சமையல் குறிப்புகள்!

chapathi making
Amazing cooking tips!
Published on

ப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலைமாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.

சப்பாத்தி மாவுடன் வெண்ணைய் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தியின் ருசியே அலாதிதான்.

சப்பாத்தியை நன்கு பேப்பர் போல் இட்டு, அதன்மேல் எண்ணெய் ஊற்றி, அதனை நான்காக மூடி, மீண்டும் ஒரு

முறை இட்டு எடுத்து கல்லில் போட்டால் உப்பிக்கொண்டு வரும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிது பாலை ஊற்றினால் சுவை அதிகரிக்கும்.

சப்பாத்திமாவை முன்தினமே பிசைந்து வைத்தாலோ, அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ மாவின் மீது எண்ணெய் தடவி வையுங்கள். காய்ந்து போகாது.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தயிர் அரைக்கப் விட்டுப் பிசைந்தால் சப்பாத்தி சுவை மிகுந்து இருக்கும்.

செஞ்ச சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமென்றால் அதை சில்வர் பேப்பரால் சுற்றி வைத்தால் போதும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய்த்தூளும், சுக்குத்தூளும் சேர்த்தால் செய்யும் சப்பாத்தி சுவையாக இருக்கும் என்று மட்டுமல்லாமல் எளிதில் ஜீரணமும் ஆகும்.

சப்பாத்திக்கு மாவு பிசையும்போது ஒரு வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தியின் சுவையே வேறுதான்.

சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து பத்து வினாடி மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடாக்கினால் மென்மையாகிவிடும்.

பூரிக்கு மாவு பிசையும்போது மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையையும், சிறிது சர்க்கரையையும் சேர்த்துப் பிசைந்தால் பூரி வெகுநேரம் மொறுமொறுப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'புரதச் சத்து' மிக்க பருப்புகள்! 
chapathi making

வீட்டில் செய்யும் பூரி ஹோட்டல் பூரி போல் உப்பலாக வரவேண்டும் என்றால், பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சோயாமாவையும், சர்க்கரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கீரையை சமையலுக்கு பயன்படுத்தும்போது அளவுக்கு மீறி காரம், உப்பு, புளி இவற்றை பயன்படுத்தினால் கீரையில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

காய்கறி சாலட் செய்யும்போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை சேர்த்துக்கொண்டால் சத்து நிறைந்த சாலட் தயார்.

புளிப்பு கூட்டு செய்யும்போது கொதித்து இறக்கும் சமயம் கொஞ்சம் வெந்தயப்பொடி தூவி இறக்கினால் கூட்டின் ருசியே அலாதிதான்.

பக்கோடா செய்யும்போது கடலை மாவுடன் கொஞ்சம் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பக்கோடா சுவை மிகுந்து இருக்கும்.

பஜ்ஜிமாவில் ஒரு ஸ்பூன் ஜீரகத்தையும் கலந்து செய்தால் பஜ்ஜி ருசியுடன் இருக்கும்.

காய்கறிகளை வதக்கும்போது கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கினால் காய்கறிகள் சீக்கிரம் வெந்துவிடும்.

ரொட்டியை டப்பாவில் போட்டு வைக்கப்போறீங்களா? அதனுடன் கொஞ்சம் மிளகைப் போட்டு வைத்தால் ரொட்டி அவ்வளவு சீக்கிரத்தில் நமத்துப்போகாது.

இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

உளுந்துவடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் அதில் கொஞ்சம் பச்சரிசி மாவைச் சேர்த்துப் பாருங்களேன். அதிகப்படியான தண்ணீரை அரிசிமாவு உறிஞ்சிவிடும்.

வாழைப்பூவை நறுக்கும்போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமல் இருக்க கைகளில் கொஞ்சம் உப்பைத் தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டுக்கிளறினால் இடியாப்பத்தின் வெண்மை நிறம் கொள்ளை கொள்ளும் மனதை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com