வீடே மணக்கும் அசத்தல் கத்தரிக்காய் மசாலா: சட்டுனு செய்யக்கூடிய செய்முறை! 

tasty eggplant masala
Amazing eggplant masala
Published on

வீட்டில் செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கு ஒரே மாதிரியான சைட் டிஷ் செய்து போர் அடித்துவிட்டதா? சரி இன்று சொல்லப் போகும் கத்தரிக்காய் மசாலா ஒருமுறை செஞ்சு பாருங்க. முற்றிலும் வித்தியாசமாக எள்ளு சேர்த்து செய்யப்படும் இந்த கத்தரிக்காய் மசாலா, செய்வதும் எளிது அதே சமயம் சுவையும் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 2

சர்க்கரை - 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன் 

சீரகத்தூள் - 1 ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

மல்லித்தூள் - 1 ஸ்பூன் 

எண்ணெய் - தேவையான அளவு

புளிசாறு - 1 ஸ்பூன் 

எள்ளு - 3 ஸ்பூன் 

பூண்டு - 5 பல் 

வர மிளகாய் - 3

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எள்ளு, வரமிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். 

அடுத்ததாக கத்தரிக்காயை தண்ணீர் ஊற்றி கழுவி, நீளவாக்கில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவேண்டும். பின்பு அதிலேயே மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு, சீரகத்தூள், மல்லித்தூள், புளிச்சாறு சேர்த்து கிளறிவிட வேண்டும். 

இதையும் படியுங்கள்:
நீண்ட நாள் வாழ ஆசையா? ஆயுளை நீட்டிக்கும் அதிசயக் குறிப்புகள்!
tasty eggplant masala

பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கத்தரிக்காயை நன்கு வேகவைத்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடம் வரை மீண்டும் வேகவைத்து இறக்கினால் சுவையான கத்தரிக்காய் மசாலா தயார். இது இட்லி தோசையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com