பாப்கார்னில் இத்தனை வெரைட்டியா? அசத்தலான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

evening snacks!
Amazing evening snacks!
Published on

சாக்லேட் பாப்கார்ன்

பாப்கார்ன் சோளம் - ஒரு கப்,

குக்கீஸ் சாக்லேட் - 50 கிராம்,

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு - சிறிதளவு,

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை பொடித்துப் போடவும். வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.

கொதிக்கும் போது சாக்லேட் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து சாக்லேட்டை ஆவியில் உருக வைக்கவும்.

உருக ஆரம்பித்ததும் இறக்கி வெண்ணெய் சேர்ந்து கட்டியில்லாமல் கிளறவும்.

பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு, பாப் கார்னைப் போட்டு, சிட்டிகை உப்பு சேர்த்து மூடியால் மூடி விடவும் பொரிந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டவும். பிறகு, தயாரித்த சாக்லேட் சிரப்பை வடிகட்டி மூலம் பாப்கார்ன் மேல் விடவும்.

நன்கு குலுக்கி சீராக பரவவிடவும். சூப்பரான சாக்லேட் பாப்கார்ன் ரெடி.

பனீர் பாப்கார்ன்

பனீர் - 150 கிராம்

கார்ன் ஃபிளேக்ஸ் - 100 கிராம்

மைதா மாவு, சோள மாவு - தலா 3 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பூண்டு - 4 பல் (அரைத்து)

வெங்காயம் - 1/2 (அரைத்து)

மிளகு தூள் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில், பனீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துகொள்ள வேண்டும்.

பின், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு, பூண்டு மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் போட்டு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பின், இதில் நாம் எடுத்து வைத்துள்ள பனீரை சேர்த்து கிண்டி கொள்ளவேண்டும்.

ஒரு தட்டில் கார்ன் பிளேக்ஸ் எடுத்து அதனை நொறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின், எடுத்து வைத்துள்ள பனீரில் அதனைப் போட்டு பிரட்டி எடுக்கவும். பனீரை தனித் தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், இதனை ஒரு அரைமணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துகொள்ளவும். பின், இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துகொள்ளவும். இதனை அப்படியே சூடாக பரிமாறலாம். அவ்ளோதான்!! டேஸ்டியான ஈவினிங் ஸ்னாக்ஸ் "பனீர் பாப்கார்ன்" ரெடி.

இதையும் படியுங்கள்:
கேரட் இருந்தா போதும்! சட்டுன்னு செய்யுங்க நாவில் கரையும் 'கேரட் டிலைட்'!
evening snacks!

பாப்கார்ன் பக்கோடா

தேவை:

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 2 கப்

காய்ந்த மிளகாய்த்தூள் - அரை டீ ஸ்பூன்

கரம் மசாலா - கால் டீ ஸ்பூன்

பாப்கார்ன் - 1 பாக்கெட்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து ஒன்று சேர பிரட்டிக் கொள்ளவும் .

பின்னர் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கொள்ளவும்

பிறகு ஒவ்வொரு பாப்கார்னாக எடுத்து மாவு கலவையில் முக்கி எடுத்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு பாப்கார்ன் பகோடா தயார்.

கோபி பாப்கார்ன்

தேவை:

காலிஃப்ளவர் - 1 (சிறியது)

ஐஸ் கட்டி தண்ணீர்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மோர் - 1/2 கப்

சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

மாவிற்கு...

கோதுமை மாவு - 1 கப்

சோள மாவு - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

இதையும் படியுங்கள்:
மாலை நேர பசிக்கு... சுவையான பிரட் ஸ்பெஷல் ரெசிபிகள்!
evening snacks!

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு மூடி 5-10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். பின் நீரை வடிகட்டி விட்டு, குளிர்ந்த நீரால் ஒருமுறை அலசிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த காலிஃப்ளவர் துண்டுகளை ஒரு பௌலில் எடுத்து, அதில் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு கிளறி, 30 நிமிடம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.

பிறகு ஊறவைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டி, பின் ஐஸ் தண்ணீரில் போட்டு உடனே எடுத்துவிட வேண்டும்.

அதன் பின் மீண்டும் மாவில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கோபி பாப்கார்ன் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com