கருணைக்கிழங்கில் இத்தனை சுவைகளா? - அசத்தல் ரெசிபிகள்!

healthy recipes
Amazing recipes!
Published on

கருணைக்கிழங்கு வடை

தேவை:

கருணைக் கிழங்கு - 1/4 கிலோ

பச்சமிளகாய் - 1

கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு -  தேவைக்கு

வெங்காயம் - 1 (பொடியாக அரிந்தது)

தேங்காய்த் துருவல் - 1 டீஸ்பூன்

கொத்துமல்லி தழை - சிறிது

மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன் 

சோம்பு தூள் - 1/2 ஸ்பூன் 

இஞ்சி துருவல் - 1/4 ஸ்பூன் 

மைதா, சோளமாவு, அரிசி மாவு - தலா 1 டீஸ்பூன் 

பொட்டு கடலை மாவு - 1 டீஸ்பூன் 

எண்ணைய் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் கருணைக்கிழங்கை தோலெடுத்து, கழுவி, பெரிய துண்டுகளாக நருக்கி கால் ஸ்பூன் உப்பு போட்டு வேகவைத்து ஆறியதும் தண்னீரை வடித்து மசித்துகொள்ள வேண்டும்.

சோம்பு, பச்சமிளகாய், தேங்காய்த் துருவல் கொத்துமல்லி தழையை அரைத்துக்கொள்ள வேன்டும். மசித்த கிழஙகில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், அரைத்த விழுது, வெங்காயம், மைதா, சோள, அரிசி, பொட்டு கடலை மாவுகள் அனைத்தையும் போட்டு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். தோசை தவாவில் எண்ணையை ஊற்றி வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். சுவையான கருணைக் கிழங்கு வடை தயார்.

கருணைக் கிழங்கு துவையல்

தேவை: 

கருணைக் கிழங்கு - ஒரு கப், 

உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன், 

பெருங்காயம் - ஒரு சிட்டிகை, 

மிளகு - ஒரு ஸ்பூன், 

காய்ந்த மிளகாய் - 2, 

புளி - சிறு நெல்லிக்காய் அளவு, 

உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு, 

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: 

உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் சட்டியில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கிழங்குத் துருவலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். 

இதனுடன் வறுத்த பொருட்கள், மீதம் உள்ள மற்ற அனைத்தையும் சேர்த்து துவையலாக அரைத்துப் பரிமாறவும்.  தாளிக்கத் தேவை இல்லை. சுவையான, சத்தான கருணைக் கிழங்கு துவையல் ரெடி.

இதையும் படியுங்கள்:
புரதம் நிறைந்த கொண்டைக்கடலை: இனிப்பு முதல் காரம் வரை சுவைமிகு ரெசிபிகள்!
healthy recipes

கருணைக்கிழங்கு அல்வா

தேவை:

கருணைக்கிழங்கு – 250 கிராம் (சுட வைத்து மசித்தது)

நெய் – 4 டீஸ்பூன்

பனங்கருப்பட்டி – ½ கப்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

பால் – ½ கப்

முந்திரி, திராட்சை – தேவையான அளவு (வறுத்தது)

செய்முறை:

ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி மசித்த கருணைக்கிழங்கை வதக்கவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து மெதுவாக கிளறி, கருணைக்கிழங்கு நன்கு கலந்ததும், பனங்கருப்பட்டி சேர்த்து, கலவை கெட்டியாக மாறும் வரை தொடர்ந்து கிளறவும். மீதமுள்ள நெய், ஏலக்காய்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும். நெய் பிரிந்ததும் இறக்கி சிறிது நேரம் ஆறிய பின் இறக்கிவைக்கவும். சுவையான கருணைக்கிழங்கு அல்வா ரெடி.

கருணைக்கிழங்கு புட்டு.

தேவை:

கருணைக்கிழங்கு – 2 கப் (வேகவைத்து மசித்தது)

அரிசி மாவு – 1 கப்

துருவிய தேங்காய் – ½ கப்

சுக்கு தூள் – ¼ டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

வெல்லம் – ¾ கப் (உருகவைத்து வடிகட்டியது)

உப்பு – சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

இதையும் படியுங்கள்:
சுத்தமான முறையில் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் தயாரிப்பது எப்படி?
healthy recipes

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சிறிது உப்பு, சுக்கு தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன்  கருணைக்கிழங்கு மசியல் சேர்த்து நன்றாகக் கலந்து ஈரமாக பிசையவும். வெல்ல நீர் சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு மாதிரி தயாரிக்கவும். புட்டு குழியில் அடுக்கும்போது – ஒரு அடுக்கு துருவிய தேங்காய், ஒரு அடுக்கு கருணைக்கிழங்கு மாவு என அடுக்கி, 10–12 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். வேகவைத்த பின் சிறிது நெய் ஊற்றி சூடாக பரிமாறவும். சூடான, சுவையான கருணைக்கிழங்கு புட்டு தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com