
நீர் பூசணி சட்னி
தேவையான பொருட்கள்:
நீர் பூசணி துருவியது - 1 கப்
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக் கரண்டி.
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -இரண்டு டீஸ்பூன்
கடுகு -ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், ஒவ்வொன்றாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பின் அதில் பூசணியை பிழிந்து எடுத்து நன்கு வதக்கவும் அதில் புளியை சேர்த்து வதக்கவும்.
ஆறியதும் அனைத்தும் உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து பூசணி சட்னியில் போடவும். வித்தியாசமான நீர்பூசணி சட்னி ரெடி. இட்லி தோசைக்கு சப்பாத்திக்கு சாப்பிடலாம்.
நீர் பூசணி புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
நீர்ப்பூசணி 2 கப். (நறுக்கிய துண்டுகள்)
தக்காளி - 1
வெங்காயம் - 1
புளி - நெல்லிக் காய் அளவு.
மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
வெந்தயம் -ஒரு டீஸ்பூன்
கடுகு -ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1
டீஸ்பூன்
எண்ணெய் - 2டீஸ்பூன்
வெல்லம் -சிறிது
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், தாளிக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளியை அரைத்து ஊற்றவும். சிறிது கொதித்ததும் அதில் புளியை கரைத்து ஊற்றி மிளகாய்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு சுண்டியதும் வெல்லம் சிறிது போட்டு நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான நீர் பூசணி புளிக்குழம்பு தயார். சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
நீர் பூசணி பாயாசம்
தேவையான பொருட்கள்:
நீர் பூசணி துருவியது - 2 கப்
பாதாம் - 4
முந்திரி - 4
தேங்காய் - 1/4 கப்
பச்சரிசி - 5 டீஸ்பூன்
நெய் - 5 டீஸ்பூன்
ஏலப்பொடி - 1 டீ ஸ்பூன்.
செய்முறை:
பாதாம், முந்திரி, பச்சரிசி மூன்றையும் ஊறவைத்து பாதாம் தோல் நீக்கி அரைக்கவும். அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்ததை கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்து கலக்கி நெய்யில் வதககிய பூசணி துருவல் சேர்த்து ஏலப்பொடி கலந்து நன்கு கொதிக்கவைத்து இறக்கவும். கலர்பொடி வேண்டுமானால் சேர்க்கலாம். சுவையான நீர்பூசணி பாயசம் ரெடி.