புகழ்பெற்ற கோவில் பிரசாதங்கள் ஈஸியா செய்யலாம் வாங்க!

famous temple offerings.
temple prasadam
Published on

-நாகஜோதி கிருஷ்ணன் 

திருச்செந்தூர் திருபாகம்

பால், கடலை மாவு, சர்க்கரை- தலா 1 கிண்ணம் பொடித்த முந்திரிப் பருப்பு, நெய்-தலா கால் கிண்ணம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம்- தலா 2 சிட்டிகை

செய்முறை:

சலித்த கடலைமாவு, பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அடுப்பில் வைத்து, கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து எடுக்கும்போது, சர்க்கரை சேர்க்கவும். முந்திரிப்பருப்பு, நெய், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறவும். அல்வா பதத்துக்கு வரும்போது. அடுப்பை அணைக்கவும்.

*****************************

 சிதம்பரம் கல்கண்டு சாதம்

தேவையானவை:

கல்கண்டு, பச்சரிசி- 1 கிண்ணம்

பாசிப் பருப்பு-2 தேக்கரண்டி

பச்சை கற்பூரம்-2 சிட்டிகை

பால்- 3 கிண்ணம்

நெய்- கால் கிண்ணம்

செய்முறை:

பாலுடன் பச்சரிசி பாசிப்பருப்பு. தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும் சூடாக இருக்கும்போது, மசிக்கவும். பொடித்த கல்கண்டுடன் கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்து விடவும், கெட்டியாகக் கொதித்து வரும்போது, வெந்த கலவை சேர்த்துக் கிளறவும். நெய், பச்சைக் கற்பூரம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

*****************************

அழகர்கோவில் தோசை

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 1 கிண்ணம்

கறுப்பு உளுந்து - கால் கிண்ணம்

கறிவேப்பிலை-2 ஆர்க்குகள்

இஞ்சி, மிளகு, சீரகம் - தலா 1 மேசைக் கரண்டி

நெய், உப்பு - தேவையான அளவு

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியமான சாமை அரிசி சர்க்கரை பொங்கல்!
famous temple offerings.

செய்முறை:

பச்சரிசி, உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஊறவைக் கவும். இரண்டு மணிநேரம் கழித்து அரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிய தோசைகளாக்கி சுற்றிலும், நெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

அரவணைப் பாயசம்

 தேவையானவை:

சிவப்பு அரிசி, வெண்ணெய் - தலா 1 கிண்ணம்

வெல்லம் - 3 கிண்ணம்

ஏலக்காய்த் தூள்- அரை மேசைக்கரண்டி

செய்முறை:

2 மேசைக்கரண்டி நெய்யில் அரிசி சேர்த்து வறுக்கவும் 4 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கரையவிடவும். வடிகட்டி, அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். வெந்த அரிசி, வெண்ணெய், ஏலக்காய்த்தூள் வைத்து கெட்டியாகும்வரை கிளறவும்.

இதையும் படியுங்கள்:
சுவையான கடலை உருண்டை - எள் உருண்டை செய்யலாமா?
famous temple offerings.

திருப்பதி கதம்ப சாதம்

தேவையானவை:

பச்சரிசி- 1 கிண்ணம் பூசணிக்காய், கத்தரிக்காய், வாழைக் காய், பறங்கிக்காய் (துண்டுகளாக அரிந்து) - தலா 3 கிண்ணம் புளி - எலுமிச்சைஅளவு மஞ்சள் தூள்- அரை மேசைக்கரண்டி பச்சைப்பயிறு- கால் கிண்ணம் கறுப்பு உளுந்து, கறுப்பு எள், மிளகு- தலா மேசைக் கரண்டி நெய் - 4 மேசைக்கரண்டி உப்பு - சுவைக்கேற்பு கறிவேப்பிலை-2 ஆர்க்குகள்

செய்முறை: 

பச்சைப் பயிறு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகு சேர்த்து வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியுடன் 2 தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். மேலும், 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கறிகள், அரிசி, நெய் சேர்த்து கிளறவும். வெந்து வரும்போது, பொடி சேர்த்துக்கிளறி அடுப்பை அமைக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com