ஆந்திரா ஸ்பெஷல் மொறுமொறு சக்கோடி - ஈஸியா செய்யலாம்!

Andhra Pradesh Chakodi
Andhra Pradesh Chakodi
Published on

ஈவினிங் டைம்ல சூடான டீயோட ஏதாவது மொறு மொறுன்னு சாப்பட செமையா இருக்கும். வட இந்தியாவுல சக்லி, நம்ம ஊர்ல முறுக்குனு ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்நாக்ஸ் ஃபேமஸா இருக்கும். அந்த வரிசையில ஆந்திராவுல ரொம்ப ஃபேமஸான, ஒரு ஸ்நாக்ஸ் தான் சக்கோடி. இது பாக்குறதுக்கு சின்ன ரிங் மாதிரி இருக்கும், ஆனா சாப்பிட்டா அவ்வளவு மொறுமொறுப்பா, காரசாரமா இருக்கும். 

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - 1 கப்

  • உளுத்தம் மாவு - 2 டேபிள் ஸ்பூன்

  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

  • சீரகம் - அரை டீஸ்பூன்

  • வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

  • பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

  • எண்ணெய்/நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

முதல்ல ஒரு பெரிய பவுல் எடுத்துக்கோங்க. அதுல அரிசி மாவு, உளுத்தம் மாவு, மிளகாய் தூள், சீரகம், வெள்ளை எள், பெருங்காயத்தூள், உப்பு எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து நல்லா கலந்து விடுங்க.

இப்போ ஒரு சின்ன கரண்டியில ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை நல்லா சூடு பண்ணி, மாவுல ஊத்துங்க. எண்ணெய் சூடா இருக்கும்போது ஒரு ஸ்பூனால கலந்து விடுங்க. 

அப்புறம் கை பொறுக்குற சூட்டுக்கு வந்ததும், கையாலயே மாவை நல்லா உதிரி உதிரியா தேச்சு விடுங்க. அப்போதான் சக்கோடி மொறுமொறுன்னு வரும்.

இப்போ கொஞ்சம் கொஞ்சமா சுடு தண்ணி ஊத்தி மாவை நல்லா பிசைஞ்சுக்கோங்க. மாவு சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியா இருக்கணும். 

ரொம்பவும் கெட்டியா இல்லாம, ரொம்பவும் தண்ணியா இல்லாம, கையில ஒட்டாம ஒரு பதத்துக்கு பிசைஞ்சு ஒரு 10-15 நிமிஷம் மூடி வச்சுடுங்க.

இதையும் படியுங்கள்:
நாவூர வைக்கும் நெல்லிக்காய் சாதம் - பருப்பு உருண்டை குழம்பு ரெசிபிஸ்!
Andhra Pradesh Chakodi

ஊறின மாவை எடுத்து ஒரு தடவை லேசா பிசைஞ்சுக்கோங்க. இப்போ அதுல இருந்து சின்ன சின்ன உருண்டைகளா எடுத்து, சப்பாத்தி தேய்க்கிற பலகை மேல வச்சு, மெதுவா நீளமா கயிறு மாதிரி தேயுங்க. ரொம்ப மெல்லிசா தேய்க்க வேண்டாம், கொஞ்சம் குண்டா இருக்கட்டும்.

தேச்ச கயிறோட ரெண்டு முனையையும் ஒண்ணா சேர்த்து ஒரு சின்ன ரிங் மாதிரி இல்லனா உங்களால முடிஞ்சா சக்லி மாதிரி சுத்தி விடுங்க. எல்லா மாவையும் இதே மாதிரி செஞ்சு வச்சுக்கோங்க.

இப்போ ஒரு கடாயில எண்ணெய் ஊத்தி சூடு பண்ணுங்க. எண்ணெய் நல்லா சூடானதும் அடுப்ப மிதமான தீயில வச்சுட்டு, செஞ்சு வச்ச சக்கோடிகள கொஞ்சம் கொஞ்சமா எண்ணெயில போடுங்க. ஒரே நேரத்துல நிறைய போடாதீங்க.

இதையும் படியுங்கள்:
மொறு மொறு கண்டா பஜ்ஜி... ஈவினிங் ஸ்நாக்ஸ் ஸ்பெஷல்!
Andhra Pradesh Chakodi

சக்கோடி ரெண்டு பக்கமும் பொன்னிறமா, நல்லா மொறுமொறுப்பா ஆகுற வரைக்கும் பொரிச்சு எடுங்க. எண்ணெயில இருந்து எடுத்ததும் டிஷ்யூ பேப்பர்ல போட்டு எக்ஸ்ட்ரா எண்ணெயை உறிஞ்ச விடுங்க.

அவ்வளவுதான் மொறு மொறுப்பான, காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல் சக்கோடி ரெடி. இத ஒரு ஏர் டைட் டப்பால போட்டு வச்சுக்கிட்டா பல நாளைக்கு மொறுமொறுப்பா இருக்கும். இந்த ரெசிபிய கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com