ஆந்திரா ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம் செய்யத் தெரியுமா? 

Andhra Special katharikkai Rasam!
Andhra Special katharikkai Rasam!
Published on

தமிழ்நாட்டில் ரசம் என்பது பெரும்பாலான வீடுகளில் தினமும் தயாரிக்கப்படும் ஒரு பிரதானமான உணவு. ஆனால், ஒவ்வொரு பகுதிகளிலும் ரசத்தைத் தயாரிக்கும் முறை மற்றும் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மாறுபடும். அந்த வகையில் ஆந்திராவின் கத்திரிக்காய் ரசம் தனக்கென தனி சுவையைக் கொண்ட ஒரு ரசமாகும். காரம், புளிப்பு மற்றும் இனிப்பு ஆகிய மூன்று சுவைகளும் சரியான விகிதத்தில் கலந்த இந்த ரசம், சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். சரி வாருங்கள் இந்தப் பதிவில் ஆந்திரா ஸ்பெஷல் கத்திரிக்காய் ரசம் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

  • கத்தரிக்காய் - 5 (பிஞ்சு கத்தரிக்காய் இருந்தால் சுவை அதிகமாக இருக்கும்)

  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

  • பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

  • உப்பு - தேவையான அளவு

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • வெல்லம் - 2 தேக்கரண்டி

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

  • புளி கரைசல் - 1/2 கப்

  • எண்ணெய் - தேவையான அளவு

  • கடுகு - 1/2 டீஸ்பூன்

  • சீரகம் - 1/2 டீஸ்பூன்

  • மிளகாய் வத்தல் - 2

  • பெருங்காய தூள் - சிறிதளவு

  • கறிவேப்பிலை - தாளிப்பிற்கு

செய்முறை:

முதலில் கத்தரிக்காயை அடுப்பில் சூட்டு அதன் தோலை நீக்கி நன்றாக மசித்து கொள்ள வேண்டும். பின்னர், மசித்த கத்திரிக்காயில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான ஜவ்வரிசி கேரட் இட்லி வித் பூசணி புளி பச்சடி செய்யலாம் வாங்க!
Andhra Special katharikkai Rasam!

இப்போது இந்தக் கலவையில் புளிக் கரைசலை சேர்த்து நன்றாகக் கலக்கி தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், மிளகாய் வத்தல், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், இதில் தயாரித்து வைத்துள்ள கத்தரிக்காய் கலவையை ஊற்றி, லேசான கொதி வந்ததும் அடுப்பை அணைத்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கத்திரிக்காய் ரசம் தயார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com