

காரசார ஆந்திரா தக்காளி பப்பு ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.துவரம் பருப்பு 1 கப்
2.பெரிய சைஸ் தக்காளி 3
3.கீறிய பச்சை மிளகாய் 4
4.பூண்டு பற்கள் 6
5.மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
6.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
7.புளி நெல்லிக்காய் அளவு
8.உப்பு தேவையான அளவு
9.கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி
10.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
11.கடுகு ½ டீஸ்பூன்
12.சீரகம் ½ டீஸ்பூன்
13.காய்ந்த சிவப்பு மிளகாய் 2
14.பெருங்காய தூள் ¼ டீஸ்பூன்
15.கறிவேப்பிலை 1 இணுக்கு
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி குக்கரில் போடவும். அதனுடன் தக்காளியை நறுக்கிப்போடவும். பூண்டுப் பற்களை நசுக்கிப் போடவும். பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். பருப்பும் தக்காளியும் ஒன்றுசேரும்படி, மத்தினால் நன்கு கடைந்து கொள்ளவும்.
பிறகு அதில் மிளகாய் தூள், ஊறவைத்து கரைத்தெடுத்த புளிக் கரைசல் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். பருப்புக் கலவை கொதித்து, பச்சை வாசனை போகும் வரை, சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் தீயை குறைத்துவிடவும். ஒரு தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், மிளகாய் வற்றல், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெடிக்கவிடவும்.
பின் அதை தக்காளி பப்பில் சேர்த்துக் கலந்துவிடவும். பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும். சூடான சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து அப்பளம் தொட்டு உண்ணவும்.
மொறு மொறு ரவா தோசை ஸ்டைலில் ராகி தோசை
ரெசிபி:
1.ராகி மாவு 3 டேபிள் ஸ்பூன்
2.கோதுமை மாவு 1 டேபிள் ஸ்பூன்
3.இட்லி மாவு 1 டேபிள் ஸ்பூன்
4.ரவா 2 டீஸ்பூன்
5.அரிசி மாவு 1 டீஸ்பூன்
6.இஞ்சி பேஸ்ட் 1 டீஸ்பூன்
7. நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சிறிது
8.உப்பு தேவையான அளவு
9.கடைந்த மோர் ¼ கப்
10.எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் ரவையை போட்டு நன்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் ஊறவைக்கவும். பின் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரவா தோசை மாவு
பதத்திற்கு தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து, சூடானதும் எண்ணெய் தடவி, கரைத்து வைத்துள்ள மாவை மெலிதாக ஊற்றி, ரவா தோசைபோல, பொன்னிறத்தில் மொறு மொறுவென்று வெந்து வந்ததும் எடுத்து விடவும். சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.