
அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
காலையில் Break fast க்கோ அல்லது இரவில் Dinner க்கோ இந்த பிடி கொழுக்கட்டையை செய்யலாம். எளிதில் ஜீரணமாகி விடும். வயதானவர்களுக்கும் இந்த பிடி கொழுக்கட்டையை கொடுக்கலாம் சாப்பிட ருசியாக இருக்கும்.
பிடிகொழுக்கட்டை செய்முறை:
முதலில் 500g அவலை நன்றாக வறுத்து பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். முழுவதும் Nice ஆக வராது. சிறிது கொர கொர என்று தான் இருக்கும். இதை உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இரண்டு பங்குகளாக பிரித்து கொள்ளுங்கள் உப்பு மற்றும் இனிப்பிற்கு.
அரை மூடி தேங்காயைத் துறுவி இரண்டு பங்குகளாக பிரித்து வைத்து கொள்ளவும்.
உப்பு கொழுக்கட்டை:
வாணலியில் நான்கைந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள், பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். துறுவிய தேங்காயையும் போட்டு கிளறவும் இப்போது தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்த பிறகு அவல் பவுடரை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக தூவி கிளறவும். நன்றாக தண்ணீர் வற்றி உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து Oval shapeல் பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். உங்களுடைய அவல் உப்பு கொழுக்கட்டை ரெடி.
தொட்டுக் கொள்ள சாம்பாரோ அல்லது சட்னியோ நன்றாக இருக்கும்.
இனிப்பு கொழுக்கட்டை:
நீங்கள் எடுத்து கொண்ட அவல் பவுடருக்கு ஏற்றவாறு வெல்லத்தை உடைத்து கொள்ளவும். கனமான பாத்திரத்தில் தண்ணீரில் வெல்லத்தை போட்டு நன்றாக கரைந்து சிறிது Thick ஆன பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் அவல் பவுடர் , ஏலக்காய்த் தூள் மற்றும் துறுவிய தேங்காயை போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு கரண்டியால் வெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக மாவில் ஊற்றி கிளறவும். நன்றாக கிளறிய பிறகு Oval shape ல் பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடத்திற்கு வேக வைக்கவும். சுவையான ஹெல்தியான அவல் இனிப்பு கொழுக்கட்டை ரெடி.
குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
(முற்றிலும் சுயமாக எழுதியது)