
பாரம்பரிய அரிசி வகைகளில் கிடைக்கும் அவலை ஊறவைத்து செய்வதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். அவற்றை வாணலியில் வறுத்து பொடித்து உப்புமாவாக செய்தால் சீக்கிரம் செய்துவிடலாம். வித்தியாசமாகவும் இருக்கும்.
அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
அவல்-1 டம்ளர்
வேர்க்கடலை- ஒரு கைப்பிடி
பீன்ஸ் அரிந்தது -ஒரு கைப்பிடி
கேரட் அரிந்தது- ஒரு கைப்பிடி
மல்லித்தழை, கருவேப்பிலை அரிந்தது -ஒரு கைப்பிடி
மாங்காய் இஞ்சி துருவல்- ஒரு டீஸ்பூன்
வரமிளகாய், பச்சை மிளகாய்- தலா இரண்டு
லெமன் சாறு- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
பெருங்காயம்- கால் டீஸ்பூன்
கடுகு, கடலைப்பருப்பு, எண்ணெய் போன்றவை தாளிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
அவளை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலை பருப்பு, வேர்க்கடலை போன்றவற்றை தாளித்து வறுத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளை சேர்த்து நன்றாக ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். பின்னர் பொடித்த அவலை சேர்த்து பெருங்காயம், மஞ்சள் பொடி கறிவேப்பிலை, தனியா, லெமன்சாறு அனைத்தையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி ஒரு ஸ்பூன் நெய் விடவும். சுவையான அவல் உப்புமா ரெடி.
மாங்காய் சட்னி
செய்ய தேவையான பொருட்கள்:
அளவுக்கு அதிகமாக புளிப்பு இல்லாத மாங்காய் துருவல் -ஒரு கப்
தேங்காய்த் துருவல்- ஒரு கப்
பச்சை மிளகாய் , வர மிளகாய்தலா- 3
பூண்டுப்பல்- 5
சின்ன வெங்காயம்- ஆறு
கருவேப்பிலை- ஒரு ஆர்க்கு
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
கடுகு, கடலைப்பருப்பு ,உளுத்தம் பருப்பு தாளிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
துருவல்கள், மிளகாய்கள், சின்ன வெங்காயம், பூண்டு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துவற்றை தாளித்து அரைத்து வைத்த சட்டினியுடன் சேர்த்து கிளறவும்.
புளிப்பு அதிகம் இல்லாததால் இட்லி ,தோசையிலிருந்து அனைத்திற்கும் தொட்டு கொள்ளலாம். புளிப்பு அதிகமான மாங்காயில் இப்படி செய்தால் ருசியாக இருக்கும். ஆனால் புளித்தமாவில் செய்யும் பதார்த்தங்களுடன் தொட்டுக்கொண்டால் மேலும் புளிப்பைக் கூட்டி அமில சுரப்பை உண்டு பண்ணும்.