
வெண்பொங்கல் - tips tips tips
1. வெண்பொங்கல் செய்யும்போது தண்ணீருக்கு பதில் ஒரு கப் பால் விட்டு செய்தால் மணக்கும். தேங்காய் பால் கூட விடலாம். வெண்பொங்கல் சுவையாக இருக்கும்.
2. வெண்பொங்கல் செய்யும்போது மிளகையும், சீரகத்தையும் பொடித்துப் போட்டால் வீணாய்ப்போகாது. நல்ல மணமாகவும் இருக்கும்.
3. பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.
4. இஞ்சியைத் துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பொங்கலுக்கு இந்த பவுடரைச் சேர்க்க மணத்துக்கு மணம், உடம்புக்கும் நல்லது.
5. வெண்பொங்கலில் மிளகு, சீரகம் போடுவோம். அதற்கு பதில் சீரகம், பச்சை மிளகாயை அரைத்துப் போட்டு செய்தால் வெண்பொங்கல் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் - tips tips tips
1. சர்க்கரைப் பொங்கல் வேகும்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றினால் பொங்கல் மணமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
2. சர்க்கரைப் பொங்கலை இறக்கியதும் கொஞ்சம் மில்க்மெய்டு ஊற்றினால் சுவை அபாரமாக இருக்கும்.
3. சர்க்கரைப் பொங்கல் சூடாக இருக்கும் போதே அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
4. வெல்லப் பொங்கல் செய்யும்போது ஒரு டம்ளர் கரும்புச்சாறும், இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தையும் மசித்து சேர்த்துக் கொண்டால் வெல்லப் பொங்கலின் சுவை அதிகரிக்கும்.
5. சர்க்கரை பொங்கல் செய்யும் போது நன்கு கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துப் போட்டு செய்தால் பொங்கல் அமிர்தமாக இருக்கும்.
6. சர்க்கரை பொங்கலுக்கு கொப்பரை தேங்காயைத் துருவி, திராட்சை, முந்திரியை அரைத்துப் போட்டு ஏலக்காய் தூள் கலந்து செய்தால் வாசனை அதிகமாக இருக்கும்.
7. சர்க்கரைப் பொங்கலுக்கு சிறிதளவு கெட்டித் தயிர் சேர்த்து செய்தால் ருசி கூடுதலாக இருக்கும்.