பொங்கல் கோயில் பிரசாதம் போல சுவையும் மணமுமாக இருக்க வேண்டுமா?

Should Pongal be tasty and fragrant?
Pongal recipes
Published on

ந்த பொங்கல் செய்யும்போதும் தண்ணீரில் சிறிது நெய் அல்லது டால்டா விட்டு அரிசியை கைளைந்து சிறிது ஊறிய பின் போட்டால் பொங்கல் ஒரு துளி கூட பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

பொங்கல் இறக்கும்போது ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக்கிளறி இறங்கினால் மணமாக இருக்கும்.

சர்க்கரை பொங்கலில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கியோ, நெய்யில் வதக்கிச் சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும். முந்திரி பருப்பு அதிகமாக சேர்க்கத் தேவையில்லை.

சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்க வெல்லப்பாகை கெட்டியாக காய்ச்சி, பிறகு அதை குழைந்த சாதம் மற்றும் பயத்தம் பருப்பு கலவையுடன் சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றினால் நல்ல மணமாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் செய்த பின் இறக்கி தேங்காய் பால் சேர்த்தால் சுவை அபாரமாக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது கொப்பரை தேங்காயை துருவி திராட்சை முந்திரி பருப்பைஅரைத்து சர்க்கரை பொங்க வில்கலந்தால் சுவையை மணமும் சூப்பராக இருக்கும்.

சர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லம் சேர்க்கும்போது வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டிய பின்பு சேர்த்தால் மண் வாயில் வராது.

சர்க்கரைப் பொங்கலுக்கு வெல்லத்தைத் குறைத்துக் கொண்டு டைமண்ட் கற்கண்டு, மில்க்மெயிட் மூணு டீஸ்பூன், சிறிது தேங்காய் பால் சேர்த்துக்கிளறி இறக்க ரிச்சான சுவையில் அசத்தும் சர்க்கரை பொங்கல்.

இதையும் படியுங்கள்:
குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகிவிட்டால்..?
Should Pongal be tasty and fragrant?

வெல்லப் பொங்கல் வெல்லத்தை ரெட்டை கம்பி பாகுவைத்து, வறுத்த அரிசியை குழைய வேகவைத்து அதில் பாகு சேர்த்து செய்தால் நீண்ட நேரம் பொங்கல் கெடாமல் இருக்கும்.

கல்கண்டு பொங்கல் செய்வதாக இருந்தால் கல்கண்டைப் பொடித்து ஒரு கம்பி பதத்தில் பாகு வைத்து வெந்த சாதத்தை அதில் சேர்த்து கிளறி ஏலப்பொடி சேர்த்து கிளறினால் நல்ல சுவையுடன் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

கரும்புச்சாறு சர்க்கரை பொங்கல் வைக்கும்போது கரும்புச்சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு வடிகட்டியபின் பொங்கலில் கலந்தால் கரும்புச் சக்கை, தூசு முதலியன நீங்கி ருசியாக இருக்கும்.

சக்கரை பொங்கல் செய்யும்போது வாசனைக்காக ஏலத்தூள், சேர்ப்போம் அத்துடன் இரண்டு சிட்டிகை அளவு சுக்கு பொடியும் சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

சர்க்கரை பொங்கல் நிறைய செய்துவிட்டால் வீணாகாமல் இருக்க பொங்கல் வைக்கும்போது நன்கு குழைந்த பின் கொஞ்சம் வெண்பொங்கலாக எடுத்து வைத்துவிட்டு, வெல்லத்தைப் போட்டு செய்தால் அந்த வெண்பொங்கலாக பிறகு உபயோகிக்கலாம்.

வெண்பொங்கல் வைத்து ஆறியதும் பொங்கல் நன்கு இறுகி விட்டால் அதை மீண்டும் தளர்வாக்குவதற்கு பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து கிளறிவிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

வெண்பொங்கலுக்கு மிளகு சீரகத்துடன் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக அரிந்து நெய்யில் தாளித்து சேர்த்தால் பொங்கல் நல்ல வாசனையுடன் கமகம என ருசியாக இருக்கும்.

வெண்பொங்கல், வடை செய்யும்போது மிளகு சீரகத்தை ஒன்று இரண்டாக பொடித்து சேர்த்தால் மிளகை தூர எறியாமல் சாப்பிடலாம்.

இதையும் படியுங்கள்:
மிளகு பொங்கலுக்கு சிறந்த தொடு உணவு, தேங்காய் சட்னியா? இல்லை சாம்பாரா?
Should Pongal be tasty and fragrant?

கீரை பொங்கல் செய்யும்போது அரிசி பருப்புடன் பொடியாக அரிந்த கீரையையும், உப்பு சேர்த்து வேகவிடவும். வேர்க்கடலை, மிளகு, சீரகம், வரமிளகாய் இஞ்சி துருவல், மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து தேங்காய் எண்ணெயில் தாளித்து பொங்கலில் கலந்தால் மணத்துடன் சுவையோ அபாரம்.

வெண்பொங்கலுக்கு வைக்கும் காய்குழம்பு, கூட்டு பொறியல்களை, உப்பு காரம் புளிப்பு சற்று தூக்கலாக வைத்தால் பொங்கலுக்கு பொருத்தமாக சாப்பிட ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com