

பொட்டுக்கடலை பிஸ்கட்
தேவை:
பொட்டுக்கடலை கிழங்கு - 2 கப்,
மைதா மாவு - 1 கப்
பொடித்த சர்க்கரை - அரை கப்,
ஓமம் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
பொட்டுக்கடலையை பொடித்து, மைதா மாவு, சர்க்கரை பொடி, ஓமம் கலந்து பிசைந்து, அப்பளமாக இட்டு, விருப்பமான வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். குழந்தைகளுக்கு மம்மீஸ் இந்த சத்துள்ள பிஸ்கட்டைக் கொடுக்கலாம்.
வேர்க்கடலை பிஸ்கட்:
தேவை:
வேர்க்கடலை - கால் கப்
மைதா - 1 கப்
வெண்ணெய் - 25 கிராம்
சர்க்கரை - கால் கப்
செய்முறை:
கடாயில் மைதா சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒன்று இரண்டாக அரைத்து சேர்க்கவும், பின்னர் அதனுடன் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி ஓவனில் வைத்து வேகவைக்கவும். சுவையான வேர்கடலை பிஸ்கட் தயார்.
ராகி பிஸ்கட்
தேவை:
கேழ்வரகு மாவு - 1 கப்
இஞ்சி - 2 இன்ச் அளவு
நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 கரண்டி
ஏலக்காய் - 4
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 1/2 கரண்டி
செய்முறை:
முதலாவதாக ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து பவுடர் போல் அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் கடாயில் கேழ்வரகு மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து 5 நிமிடத்துக்கு மிதமான சூட்டில் வறுத்து வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
பின்னர் இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து உப்புடன் உரலில் இடித்துக் கொள்ளவும். இடித்து வைத்துள்ள இஞ்சியை மா உள்ள பாத்திரத்தில் சேர்த்து, பேக்கிங் பவுடர் எண்ணெய் சேர்த்து கரைத்துக்கொள்ள பிஸ்கட் மாவு ரெடி.
இறுதியாக இதை பேக்கிங் ட்ரேயில் வேண்டிய வடிவத்தில் தட்டி வைக்கவும். பின்னர் பேக்கிங் ட்ரேயை 180 c வெப்பநிலையில் 8 நிமிடத்துக்கு வைத்து பேக் செய்து கொள்ளவும். சத்தான, சுவையான ராகி பிஸ்கட் ரெடி.
பாதாம் பிஸ்கட்
தேவை:
உப்பில்லாத வெண்ணெய் - 75 கிராம்,
சர்க்கரை - 100 கிராம்,
பேக்கிங் சோடா - 1 கிராம்,
மைதா - 150 கிராம்,
பேக்கிங் பவுடர் - 3 கிராம்,
பாதாம் - 50 கிராம்,
பாதாம் பவுடர் - 25 கிராம்,
எலுமிச்சை தோல் துருவல் -1 டீஸ்பூன்
செய்முறை:
பாதாமை பொடியாக நறுக்கி சர்க்கரை வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி, மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், எலுமிச்சைத் தோல், பாதாம் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
நறுக்கிய பாதாமை சேர்த்து கலந்து பிரட் போன்ற வடிவம் கொண்ட பேக்கிங் தட்டில் 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்யவும். ஆறியதும், மெல்லிய துண்டுகளாக வெட்டி மீண்டும் பேக்கிங் தட்டில் வைத்து 150 டிகிரி யில் 10 நிமிடம் பேக் செய்யவும். பிஸ்கெட் மொறு மொறுப்பானதும் வெளியே எடுத்து ஆறியதும் சுவைக்கலாம். சுவையான பாதாம் பிஸ்கட் ரெடி.