சமையல் அறையில் ஸ்மார்ட்டாக செயல்படுங்கள்!

smart kitchen  tips
Kitchen tips
Published on

-கல்பனா ராஜகோபால்

பூண்டு

பூண்டு வாங்கியவுடன் பூண்டை முழுதாக வைக்காமல் அதன் பற்களை தனித்தனியாக எடுத்து பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் அதில் பூச்சி தாக்குதல் இருக்காது.

பூண்டை தனி பற்களாக பிரிக்கும்பொழுது உள்ள சிறு பூண்டுப் பற்களை தனியாக உரித்து மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் ரசம் குழம்பு ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை வாங்கிதும் உடனே அதனை ஒரு பேப்பர் அல்லது துணியின் மீது பரப்பி உலர வைத்தால் அதில் உள்ள அதிக ஈரத்தன்மை காய்ந்துவிடும். பிறகு சுத்தம் செய்து பிரித்து வைத்துக் கொண்டால் சிறிய அளவில் உள்ள வெங்காயத்தை உரித்து வைத்துக் கொண்டால் அப்படியே சிறு தாளிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் நறுக்கத் தேவையில்லை.

தேங்காய்

சமையலில் தேங்காய் ஒரு அத்தியாவசிய பொருளாக உள்ளது அதை ஒவ்வொரு முறையும் துருவிக் கொண்டிருப்பது என்பது நேரத்தை வீணடிக்கும். எனவே இரண்டு அல்லது மூன்று தேங்காய்களை உடைத்து அதனை பொடி பொடியாக நறுக்கி ஒரு தட்டில் வைத்து ஃப்ரிட்ஜில் ஃபீரீசரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்து பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு அனைத்து எடுத்தால் தேங்காய் துருவல் ரஸ்க் பொடி போல பொல என்று இருக்கும் தேவையான நேரத்தில் எடுத்து உபயோகித்துக்கொள்ள எளிதாக இருக்கும் மேலும் நேரம் மிச்சப்படும்.

காய்கறிகளின் சத்துக்கள் வீணாகாமல் இருக்க குக்கரைத் தவிர்த்து அவற்றை ஆவியில் வேகவைப்பது மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் டேஸ்டில் 4 வேப்பம்பூ ரெசிபிகள்... சுவை சும்மா அள்ளும்!
smart kitchen  tips

உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வதாக இருந்தால் வேகவைத்து அரைமணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் குழையாமல் பொடி மாஸ் வரும்.

கீரை கடைசல் செய்யும்பொழுது ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் பாலில் வேகவைத்தால் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும் சுவையும் கூடும்.

புலாவிற்கு தயிர் பச்சடி செய்யும் பொழுது சாம்பார் வெங்காயத்தை தேவையான அளவுகளில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு அலசிவிட்டு பிறகு தண்ணீரை நன்றாக வடித்த பின் உப்பு கொத்த மல்லி தழை மிளகுத்தூள் தக்காளி சேர்த்து நன்றாக பிசறிய பின் தயிரில் கலந்து பரிமாறினால் சுவை தூக்கலாக இருக்கும். விருப்பப்பட்டால் சிறிது காராபூந்தி தூவியும் பரிமாறலாம்.

பாசிப்பயறு கொள்ளு போன்ற பயிர் வகைகளை சமைக்கும் பொழுது அதனை முதல் நாள் இரவே ஊறவைத்து விட்டால் சமைக்கும் நேரம் மிச்சமாகும் சுவையும்கூடும்.

முட்டை

முட்டை வேகம் வேக வைக்கும்போது அதில் விரிசல் வராமல் இருப்பதற்கு வேக வைக்கும்போது தண்ணீரில் ஒரு ஸ்பூன் கல் உப்பை சேர்த்துவிட்டால் முட்டையில் விரிசல் வராது.

வேகவைத்த முட்டைகளை குளிர்ந்த நீரில் போட்டு பின் உரித்தால் எளிதாக இருக்கும்.

முட்டை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் ஆறவிட்டு அதனை வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகள் அல்லது indoor plants ல் ஊற்றலாம்.

சமைக்கும்போது காய்கறிகளை நறுக்கும்போது cutting board க்கு அருகில் கை அவச ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் காய்கறி கழிவுகளை போட ஒரு பிஸால்டிக் பேசின் ஒரு டவல் வைத்துக்கொண்டால் அடிக்கடி சிங்குக்கு செல்லும் வேலை மிச்சமாகும் காய்கறி கழிவுகளை அகற்றும் பணியும் எளிதாக முடியும்.

சப்பாத்தி தேய்க்கும் பலகையும் கட்டையையும் நம் சப்பாத்தி தேய்க்க ஆரம்பிக்கும் நேரத்தில் தண்ணீரில் அலச முடியாது. எனவே அதனை வேலை முடிந்ததும் நன்றாக அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து ஒரு பையில் அல்லது ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அதனுடன் அதை துடைக்கும் ஒரு டவலையும் எளிதாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அல்வாவைத் தாண்டி திருநெல்வேலியில் இப்படியும் உணவுகளா? நம்பவே முடியல!
smart kitchen  tips

பாத்திரம் தேய்க்கும் சிங்கில் எப்பொழுதும் தனியாக சிறு அளவு சோப் ஆயில் அல்லது துணி துவைக்கும் லிக்விட் தண்ணீரில் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கூடவே ஒரு பழைய ஸ்கிரப்பரையும் வைத்துவிட்டால் தேய்த்து உடன் அந்த சிங்கை தேய்த்து அலசி பூச்சி உருண்டைகளை போட்டு வைத்துவிட்டால் வாடையும் வராது சுத்தமாகவும் இருக்கும்.

பருப்புகள் போட்டு வைத்திருக்கும் சம்படங்களில் சிறு டம்ளர் அல்லது சிறு கப்புக்களை போட்டு வைத்துவிட்டால் அளவிற்கு ஈசியாக இருக்கும் கைப்படாமல் எடுப்பதால் பூச்சி வண்டு தாக்குதலை தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com