பீட்ரூட் இட்லி!

பீட்ரூட்  இட்லி
பீட்ரூட் இட்லி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையான பொருட்கள்

1.இட்லி மாவு - 1 கப்

2.பீட்ரூட் விழுது - 1/4 கப்

3.கடுகு - 1/4 டீஸ்பூன்

4.கருவேப்பிலை - சிறிதளவு

5.பீட்ரூட் துருவல் - 1 டீஸ்பூன்

6.உப்பு - தேவையான அளவு

7.எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1.இட்லிமாவில் பீட்ரூட் விழுது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

2.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து பீட்ரூட் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவைத்து கொள்ளவும்.

3.பின்னர் இட்லி மாவில் பீட்ரூட் துருவலை நன்கு கலந்து கொள்ளவும்.

4.இட்லி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து நன்கு வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.

logo
Kalki Online
kalkionline.com